வாரிசு அரசியலுக்கு இனி வாய்ப்பில்லை!! இடைத்தேர்தலில் திமுகவை மக்கள் வச்சி செய்யவேண்டும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம் !

Photo of author

By Vijay

வாரிசு அரசியலுக்கு இனி வாய்ப்பில்லை!! இடைத்தேர்தலில் திமுகவை மக்கள் வச்சி செய்யவேண்டும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம் !

Vijay

Succession politics no more chance!! Former minister Sellur Raju's passionate speech should make DMK a people's party in the by-elections!

வாரிசு அரசியலுக்கு இனி வாய்ப்பில்லை!! இடைத்தேர்தலில் திமுகவை மக்கள் வச்சி செய்யவேண்டும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம் !

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் டி எம் கோர்ட் பகுதியில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய போது, தற்போதைய காலகட்டத்தில் அசுர வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நாம் தமிழ் மொழிக்காக தனது உயிரை நீர்த்து தியாகம் செய்தவர்களை நினைவு கூறுவது மாணவர்களின் முதல் கடமையாகும் என்றும் பல நாடாளுமன்ற கூட்டத்தில் தமிழ் மொழிக்காக சிறப்புரை ஆற்றியிருக்கிறேன் என்றும் கூறினார்.

மேலும் திமுகவிற்கு தமிழ் மொழியை குறித்து பேச அருகதையே இல்லை. குறிப்பாக மு கருணாநிதி தமிழ்மொழி வளர்ச்சிக்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்ததே கிடையாது. மேலும் இந்த வாரிசு அரசியல் நடத்தி வரும் திமுகவினர் சதுரங்க வேட்டை படத்தில் வரும் காட்சி போல ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால் அவனுடன் ஆசையை தூண்ட வேண்டும் என்ற பாணியில் தமிழகத்தை ஏமாற்றி வருகின்றனர்.

சதுரங்க வேட்டை போல் தமிழக மக்களிடம் தேர்தலுக்கு முன்பு மு.க ஸ்டாலின் நீட் தேர்வு ரத்து, பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், கேஸ் மானியம் வழங்கப்படும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் போன்றவற்றை மக்களிடம் ஆசை வார்த்தையாக  கூறி தேர்தலில் வெற்றி பெற்று தற்போது மக்களை ஏமாற்றி வருவதாக கூறினார்.

கருணாநிதி ஸ்டாலின், உதயநிதி, இன்பநதி போன்ற இவர்கள் தான் திமுகவில் தலைவர்கள். காலம் தோறும் வருவார்கள் ஆனால் அதிமுகவில் தொண்டனாக இருந்த ஒருவன் நாளை தலைவன் ஆகலாம் என்று கூறினார்.

தமிழ் தமிழ் என்று கூறிய திமுகவினர் தற்போது பொங்கலுக்கு வழங்கப்பட்ட வெள்ளத்தினை வட மாநிலங்களில் இருந்து தான் கொள்முதல் செய்தனர். ஏன் தமிழகத்திலிருந்து பெற்றிருக்கலாமே இதிலிருந்து தெரியவில்லையா திருட்டு கும்பலின் அட்டூழியங்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வாரிசு அரசியலில் இனி கிடையாது என்பதை உணர்த்தும் வகையில் வரும் ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவை, மக்கள் வச்சி செய்ய வேண்டும் என அவர் உறுதிமொழி எடுத்துள்ளதாக கூறினார்.