வாரிசு ஆடியோ வெளியீடு! பட்டையை கிளப்பும் விஜய் மாஸ் என்ட்ரி!!

Photo of author

By Amutha

வாரிசு ஆடியோ வெளியீடு! பட்டையை கிளப்பும் விஜய் மாஸ் என்ட்ரி!!

விஜய் நடித்த வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது.

இளைய தளபதி விஜய் நடிக்கும் 66-வது திரைப்படம் தான் வாரிசு. முழுக்க முழுக்க குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்ட இந்த படத்தினை ஐதராபாத்தை  தலைமையாக கொண்ட ஸ்ரீ வெங்கடேஸ்வர நிறுவனம் தயாரித்துள்ளது. தெலுங்கு இயக்குநர் வம்சி கிருஷ்ணா இயக்க தமன் இசை அமைத்துள்ளார். விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, குஷ்பூ, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

பொங்கலுக்கு வெளியாகும் இந்த படத்தினை தமிழகம் முழுவதும் செவன் கிரீன் ஸ்டுடியோ வெளியிடுவதாக இருந்தது. ஆனால் 4  முக்கிய நகரங்களில் வெளியிடும் உரிமையை சில நாட்களுக்கு முன் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கி இருந்தது. இந்நிலையில் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று டிசம்பர் – 24 ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்றது.

இந்த ஆடியோ வெளியீட்டிற்கு டிக்கெட் விற்பனை சூடு பிடிக்க விற்பனையாகியுள்ள நிலையில் அதில் வாரிசு படத்தின் புதிய ஸ்டில்லை போட்டுள்ளனர். அது தற்போது செம வைரல் ஆகியுள்ளது. அடுத்து பட வெளியீட்டு விழாவிற்கு வந்த ராஷ்மிகா மந்தானாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ஆடியோ லாஞ்சுக்கு ஏராளமான ரசிகர்கள் வந்துள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரங்கின் உள்ளே விஜய் நடித்த படங்களின் முக்கிய காட்சிகள் காட்டப்பட்டன. மேலும் அவரின் அரிய புகைப்படங்கள் வெளியாகின. விஜய் பெற்றோர், டி.ராஜேந்திரன், ராஷ்மிகா, மற்றும் தமன் வந்துள்ளனர். மேலும் நடிகர் விஜய் கருப்பு கோட்டில் வெள்ளை சட்டையில் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் ரஞ்சிதமே பாடலில் வருவது போன்று ரசிகர்களுக்கு கிஸ் கொடுத்துள்ளார். தற்போது வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது.