இப்படியுமா ஒரு வினோத ஆசை! பரிதாபமாக உயிரை விட்ட புதுமணப்பெண்!

0
157
Such a bizarre desire! The newlyweds who have died miserably!
Such a bizarre desire! The newlyweds who have died miserably!

இப்படியுமா ஒரு வினோத ஆசை! பரிதாபமாக உயிரை விட்ட புதுமணப்பெண்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குப்தா. இவரின் மகன் ஆகாஷ் குப்தா. ஆகாஷ்க்கும், ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்துமுடிந்தது. ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றை குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். செல்பி எடுப்பதில் ஆர்வம் கொண்ட ராதிகாவுக்கு துப்பாக்கியை கையில் வைத்தபடி புகைப்படம் எடுக்க ஆசை.

இந்நிலையில் குண்டு நிரப்பப்பட்ட ஒற்றை குழல் துப்பாக்கியை தனது முன் நிறுத்தியபடி ட்ரிகரில் கையை வைத்துக்கொண்டு செல்பி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரே ட்ரிகரை அழுத்தியதால் குண்டு வெடித்துள்ளது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது ராதிகா ரத்த வெள்ளத்தில் சாய்ந்து கிடந்தார். இதனையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ராஜேஷ் குப்தா கூறும்போது பஞ்சாயத்து தேர்தல் காரணமாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை என் மகன் வீட்டுக்கு வாங்கி வந்தார். அப்போது மருமகள் அதைக்கொண்டு செல்பி எடுக்கும் போது தவறுதலாக குண்டு பாய்ந்து உயிரிழந்தார் என்றும் கூறியுள்ளனர்.

அவர் துப்பாக்கியுடன் எடுத்த செல்பி புகைப்படத்தையும் அவர்கள் காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில் ராதிகாவின் தந்தை இந்த மரணம் குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

Previous articleவட கொரியா நாட்டின் அதிபர் செய்த காமெடி செயல்!! என்னனு நீங்களே பாருங்க!!
Next articleகோவையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் சடலத்தால் பரபரப்பு!! போலீசார் தீவிர விசாரணை!!