பிரபல நடிகைக்கு இப்படி ஒரு வியாதியா! அதிர்ந்து போன ரசிகர் கூட்டம்!

Photo of author

By Rupa

பிரபல நடிகைக்கு இப்படி ஒரு வியாதியா! அதிர்ந்து போன ரசிகர் கூட்டம்!

மாரி, துப்பாக்கி,போன்ற படங்களில் நடித்த பிரபல நடிகையான காஜல் அகர்வாலுக்கு ஆஸ்துமா நோய் உள்ளது.இவர் சமீபகாலத்தில் தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணம் செய்த பிறகும் அவர் படங்களில்  நடித்து வருகிறார்.

இப்பொழுது இவர் பாரிஸ், இந்தியன் இரண்டாம் பாகம்,மற்றும் ஹேய் சினாமிக்கா போன்ற படங்களில் நடித்து வருவது குறுப்பிடத்தக்கது.காஜல் அகர்வால் கூறியதாவது, எனக்கு சிறு வயதிலிருந்தே ஆஸ்துமா பிரச்சனை உள்ளது.

இதனால் குளிர் காலங்களில் பெரும் சிரமத்திற்குள்ளாவேன்.மேலும் தூசி போன்றவைகளும் எனக்கு பெரும் பாதிப்பை கொடுக்கும்.சிறு வயதிலிருந்து பல மருந்துகளை உட்கொண்டும் எந்த பயனையும் அளிக்கவில்லை.

அதனால் நான் உணவு கோட்பாடுகளில் மிகவும் கவனமாக இருப்பேன்.அதிக பாதிப்புகள் ஏற்படும் போது இன்ஹேலர் பயன்படுத்திக்கொள்வேன்.எனக்கு 5 வயது முதல் ஆஸ்துமா பிரச்னை  இருப்பதால் எந்த வித நிரந்தர தீர்வும் இல்லை.அனால் இன்ஹேலரை பயன்படுத்தும் போது அதிக மாற்றத்தை உணர்ந்தேன்.

மக்கள் இன்ஹேலரை பொது இடங்களில் பயன்படுத்த தயங்குகின்றனர்.இந்த தயக்கத்தை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.