சூடான் விவகாரம்! ஆப்ரேஷன் காவேரி திட்டம் தயார் 

0
153
#image_title
சூடான் விவகாரம்! ஆப்ரேஷன் காவேரி திட்டம் தயார் .
சூடான் நாட்டில் கடந்த சில நாட்களாக ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை தீவிரமடைந்து வருகிறது, இதில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, 72 மணிநேர போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது என கூறப்பட்டது.
இந்த போர் ஒப்பந்தங்களையும் மீறி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால், சூடானில் உள்ள வெளிநாட்டை சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த பணியில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவியுடன் நேரிடையாக களத்தில் இறங்கி, தங்களது நாட்டு தூதர்கள் மற்றும் மக்களை மீட்டு வருகின்றனர்.
இதுவரை இந்தியர்கள் உள்பட 28 நாடுகளை சேர்ந்தவர்கள் சூடானில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் சகோதர மற்றும் நட்பு நாடுகளை சேர்ந்த குடிமக்கள் 66 பேரை வெளியேற்றி இருக்கிறோம் என சவுதி அரேபியா அரசும் நேற்று தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டு உள்ள செய்தியில், சுடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேஷன் காவேரி திட்டம் துவங்கிவிட்டது. சுமார் 500 இந்தியர்கள் சூடான் துறைமுகம் வந்தடைந்தனர். மேலும் பலர் வரவுள்ளனர்.
அவர்களை இந்தியா அழைத்துவர நமது கப்பல்கள் மற்றும் விமானம் தயார் நிலையில் உள்ளது. சூடானில் சிக்கித் தவிக்கும் அனைத்து சகோதர சகோதரிகளையும் மீட்போம், என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Previous articleதமிழ்நாடு பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்: ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி
Next articleதமிழகத்தில் முதல்முறையாக மதுரை அருகே கோவிலில் திருஞான சம்பந்தர் பாடல் பதிந்த தங்க ஏடு கண்டெடுப்பு