தலைமை செயலகத்தில் இருந்து வெளிவந்த திடீர் அறிவிப்பு! ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இதுவே கடைசி நாள்!

0
217
Sudden announcement from the General Secretariat! This is the last day for IAS officers!
Sudden announcement from the General Secretariat! This is the last day for IAS officers!

தலைமை செயலகத்தில் இருந்து வெளிவந்த திடீர் அறிவிப்பு! ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இதுவே கடைசி நாள்!

தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் பணியில் உள்ள ஐ. ஏ.எஸ் அதிகாரிகள் 2022 ம் ஆண்டு ஜனவரி 31 ம் தேதிக்குள் தங்களது சொத்து விவரங்களை முழுமையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தங்களது பெயரிலும், தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற வெளிநபர்கள் அதாவது பினாமி பெயரிலும் தங்களுக்கு உள்ள மற்றும் சொந்தமான அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் அவர்களின் உறவினரின் பெயரிலோ அல்லது தெரிந்தவர்கள் பெயரிலோ உள்ள சொத்து விவரங்கள் அனைத்தையும் ஆன்லைனிலும் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சரியான காரணம் எதுவும் இல்லாமல் சொத்து விவரங்களை தெரிவிக்காமல் இருக்கும் அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஅரசு ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு! 14 பேர் பரிதாப பலி!
Next articleஇவர்களுக்கு கட்டாயம்   நிரந்தர பணி நீக்கம்! பணியாளர்களுக்கு போக்குவரத்து துறையின் அதிரடி எச்சரிக்கை!