ADMK DMK: அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிகாரமோதல் போக்கானது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே இருந்தது. இதில் நிர்வாகிகள் மத்தியில் இபிஎஸ் தான் பலம் பெற்றவராக முன்னிறுத்தப்பட்டார். இதன் பிறகு பன்னீர்செல்வம் சசிகலா உள்ளிட்ட அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் தங்களுக்கென்று அதிமுக ஒருங்கிணைப்பு குழு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சி தொடங்கினர்.
ஒரு கட்டத்தில் அதிமுக வாக்குகள் சிதறுகிறது இதனால் மீண்டும் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்று பல கோணங்களில் எடப்பாடி-யிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு பயனும் இல்லை. தற்போது வரை தான் எடுத்த முடிவில் மாறாமல் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டேன் எனக் கூறி வருகிறார். அதிமுக உதறிவிட்டாலும் பாஜக அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து தங்களின் தேவைக்காக வைத்திருந்தது.
எப்பொழுது அதிமுகவுடன் கைகோர்த்ததோ அப்போதையிலிருந்து சசிகலா, ஓபிஎஸ் தினகரன் என யாரையும் பாஜக கிட்ட நெருங்க விடுவதில்லை. இதனால் முதலில் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டார். தற்போது தினகரனும் அந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதில் ஓபிஎஸ் ஸ்டாலினுடன் கலந்துரையாடி உள்ளதால் வரும் நாட்களில் அவருடன் கூட்டணி வைப்பது உறுதி எனக் கூறுகின்றனர்.
அதிலும் இந்த செப்டம்பர் மாதம் இறுதிக்குள் திமுக உடனான கூட்டணியை உறுதி செய்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.