பல்வேறு மாநிலங்ககளில் பெட்ரோல், டீசலுக்கு திடீர் நெருக்கடி ! காரணம் என்ன ?
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இதனால் மக்கள் பெரும் அவதிபடுகின்றனர் . நாட்டில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயில் விலை கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் நிறுவனங்களுக்கு மாற்றி அமைத்து நிர்ணயம் செய்து வருகின்றனர் . பல மாநிலங்களில் பெட்ரோல் ,டீசலின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது .தனியார் நிறுவனங்கள் விற்பனை நிலையங்களை விட ,இந்தியன் ஆயில் ,இந்துஸ்தான் பெட்ரோலியம்,பாரத் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் பெட்ரோல் விற்பனை அதிகரித்து வருவதாக அந்தந்த நிறுவனங்கள் கூறப்பட்டுள்ளது .
இதனால் பல மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.மத்தியபிரதேசம்,ராஜஸ்தான் மற்றும் கர்நாடக மாநிலங்களின் பெட்ரோல்,டீசல் இல்லாததால் பல விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு இருந்தன. மேலும் சில விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்திருந்த அவலம் ஏற்பட்டு உள்ளது. கூடுதலாக சில நிறுவனங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு அமைப்பில் தெரிய வந்துள்ளது .பெட்ரோலியம் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் பொதுத்துறை பெட்ரோல் விற்பனை நிலையங்களில் தேவைகேற்ப விற்பனை அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது .இதையொட்டி ராஜஸ்தான் ,மத்தியபிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஐம்பது சதவீதம் பெட்ரோல் மற்றும் டீசலின் தேவை அளவுக்கு அதிகமாக பற்றாகுறை ஏற்பட்டுள்ளதை கணக்கிடப்பட்டுள்ளது .
இதனால் பெட்ரோல் நிலையங்களில் மக்கள் காத்திருக்கும் அவலம் ஏற்படுகின்றது .நாட்டின் பெட்ரோல் மற்றும் டீசல் தேவைகேற்ப அதிகரித்து வருகின்றது. தேவை அதிகரிப்பதன் காரணமாக தொழில்நுட்பங்களில் பிரச்சனை ஏற்படுகின்றது .பெட்ரோல் மற்றும் டீசல் நெருக்கடிகளை குறித்து பல்வேறு துறை நிறுவனங்களும் தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.தமிழகத்திலும் சில இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாகி கொண்டே தான் இருகின்றது.தேனீ ,கிருஷ்ணகிரி மற்றும் பெரியகுளம் ஆகிய இடங்களிலும் பெட்ரோல், டீசல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என அறிக்கை வெளியாகி உள்ளது.முன் பணம் செலுத்தும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மட்டும் பெட்ரோல்,டீசல் விநியோகிக்கப்படும் என்பதை தெரிவித்துள்ளார்கள் .