ஐயப்பனை காண வந்த பக்தர் திடீர் உயிரிழப்பு உடனடியாக ரூபாய் 5 லட்சம் நிவாரணம்!!

திருவனந்தபுரம் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 15 ஆம் தேதி திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த பூஜையில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றன. மேலும் சாமி தரிசனம் செய்ய குறைந்தது 18 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றன ஐயப்ப பக்தர்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் விஜயபுரத்திலிருந்து வந்து முருகாச்சாரி என்ற பக்தர்  பம்பையில் இருந்து சன்னிதானம் நோக்கி மலையேறிச் சென்றிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக நீலிமலை என்ற இடத்தில் சென்ற போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. அதன் பிறகு அங்குள்ள அவசர சிகிச்சை பெற பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் முருகாச்சாரி  உயிரிழந்தார் பின்னர் அவர்களுடன் திருவாங்கூர் தேவஸ்தான சொந்த செலவில் அவரது சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

தேவஸ்தானம் அறிவித்தபடி சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தால் அவர்கள் குடும்பத்திற்கு ரூ.5  லட்சம் காப்பீடு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி முருகாச்சாரியார் குடும்பத்திற்கு உடனடியாக 5 லட்சம் காப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுத்தது திருவாங்கூர் தேவஸ்தானம்.