பிரபல வில்லன் நடிகர் மற்றும் இயக்குனர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரை உலகம்!

0
167
Sudden death of famous villain actor and director! Screen world in shock!
Sudden death of famous villain actor and director! Screen world in shock!

பிரபல வில்லன் நடிகர் மற்றும் இயக்குனர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரை உலகம்!

பல படங்களில் வில்லன் நடிகராக வந்தவர் ஆர்.என்.ஆர். மனோகர். இவர் திரைபடங்களையும் இயக்கி உள்ளார். இவர் 1993ஆம் ஆண்டு வெளிவந்த பேண்ட் மாஸ்டர் படத்தில் இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் இடம் உதவியாளராக பணியாற்றினார். அதன்பிறகு ஐ.வி. சசி இயக்கத்தில் வெளியான கோலங்கள் படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். அந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார்.

அதைத் தொடர்ந்து அவர் விஜயகாந்த் நடித்த தென்னவன் படத்துக்கும் வசனம் எழுதினார். அந்த படத்தில் விவேக் உடன் அவர் நடித்திருந்த ரவுடி கதாபாத்திரம் மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது. அதன்பிறகு 2009 ம் ஆண்டு நகுல் மற்றும் சுனைனா இணைந்து நடித்த மாசிலாமணி படத்தை இயக்கினார். அதேபோல் நடிகர் நந்தாவின் நடிப்பில் வெளியான வேலூர் மாவட்டம் என்ற படத்தையும் இவரே இயக்கியுள்ளார்.

இது தவிர என்னை அறிந்தால், நானும் ரவுடிதான், வேதாளம், மிருதன், கைதி, உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இவர் நடித்த கதாபாத்திரங்களில் மக்களுக்கு அவ்வளவு எளிதில் மறக்காத அளவுக்கு அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றி போய் நடித்திருந்தார். இந்நிலையில் ஆர்.என்.ஆர். மனோகர் சென்னையில் திடீரென்று மாரடைப்பால் காலமானார்.

அவரது மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது பலருக்கும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தற்போது கொரோனா தொற்றின் தொடர்ச்சியாக பலரும் நம்மை விட்டு பிரிந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் இவர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே போல் ஆர்.என்.ஆர். மனோகரனின் மகன் ரஞ்சன் கடந்த 2012 வருடத்தில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி சென்னையில் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி பலியானதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleஜெய்பீம் குறித்து சந்தானத்தின் கருத்து! வைரலாகும்  வி ஸ்டாண்ட் வித் சந்தானம் ஹாஷ்டாக்!
Next articleதடுப்பணையில் குளிக்க சென்ற 8 மாணவர்கள்! அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்!