DMK: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாகத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலின் போது வேலூர் தொகுதிகள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிரானந்த் போட்டியிட்டார். அச்சமயத்தில் துரைமுருகனின் வலது கையாக இருக்கும் பூஞ்சோலை சீனிவாசன் இவரை வெற்றி பெற வைக்க பல கோடி ரூபாய் தொகுதியில் இறக்கி இருப்பதாக தகவல் வெளியானது. வெளியான தகவலின் பெயரில் வருமானவரித்துறையினர் சோதனை செய்தது.
அதில், துரைமுருகன் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 10 லட்சம் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து இவருக்கு வலது கையாக இருக்கும் பூஞ்சோலை சீனிவாசன் வீடு மற்றும் குடோன் உள்ளிட்ட இடங்களை சோதனை செய்ததில் 11 கோடி ரூபாய் பறிமுதல் செய்தனர். மேற்கொண்டு தேர்தல் சமயத்தில் எப்படி இவ்வளவு ரூபாய் பணம் வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்டது என்பது குறித்து அடுத்தடுத்து கேள்விகள் முன்வைக்கப்பட்டது.
அத்தோடு கதிர் ஆனந்த் மற்றும் பூஞ்சோலை சீனிவாசன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நபராக இடம்பெற்றிருப்பது பூஞ்சோலை சீனிவாசன் என்பதால், தற்பொழுது அமலாக்கத்துறை அவருக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேற்கொண்டு இந்த வழக்கு குறித்து அமைச்சர் தங்களது வழக்கறிஞரை சந்தித்த கையோடு தலைமைச் செயலகத்தில் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார். இந்த வழக்கிலிருந்து வெளிவருவதற்கான திட்டத்தை ஸ்டாலின் வகுத்து கொடுப்பதாக அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். கட்சி ரீதியான பணம் கையாடல் ஆகியுள்ளதால் திமுக-விற்கு கலங்கம் ஏற்படாமல் இந்த வழக்கை முடிக்க வேண்டுமென ஸ்டாலின் எண்ணுகிறாராம்.
முன்னதாகவே திமுக ஆட்சி குறித்து மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் மேலும் ஓட்டுக்காக பணம் பட்டுவாடா செய்தது தெரியவரும் பட்சத்தில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் இது பாதகமாக அமைத்துவிடும் என கூறுகின்றனர்.