ADMK TVK: அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு முன் பல்வேறு விமர்சனங்களும் அரசியல் களத்தில் பேசப்பட்டது. அதாவது விஜய்யுடன் கூட்டணி வைக்கப் போகிறார் இது ரீதியாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் அது ஏதும் ஒத்துவராமல் மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்தனர். இவர்களுடன் சில கோட்பாடுகளை முன்னிறுத்தி தான் கூட்டணி அமைத்தனர்.
ஆனால் தற்போது அதிமுக தலைமையில் கேட்காமலேயே செய்து ஊடகத்திற்கு, இலையின் மீது தான் தாமரை மலரும் கூட்டணி ஆட்சி எனக் கூறி வருகின்றனர். இது எடப்பாடிக்கு பிடிக்கவில்லை. அதேபோல வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ் சசிகலா தினகரன் உள்ளிட்டோரை இணைக்கும் முயற்சியிலும் இறங்கி உள்ளனர்.
இவர்களெல்லாம் கட்சியில் ஒருபோதும் இணையக்கூடாது என்பதை தான் எடப்பாடி வழிமொழிந்து வருகிறார். ஆனால் இதனையும் பாஜக காது கொடுத்து கேட்கவில்லை. இப்படி இருக்கையில் மீண்டும் விஜய்யுடன் கூட்டணி வைக்கலாம் என்ற ரகசிய பேச்சுவார்த்தை நடப்பதாக நாம் தமிழர் கட்சி அபுபக்கர் கூறியுள்ளார். இது ரீதியாக மேலும் அவர் கூறியதாவது, நமக்கு எப்படி தேசிய அளவில் காங்கிரஸ், பாஜகவும் தமிழக அளவில் திமுக அதிமுகவும் எதிரிகளோ விஜய்யும் அப்படி தான்.
மேலும் கட்சி ரீதியாக விமர்சனம் செய்யும் பொழுது அதில் உள்நோக்கம் ஏதும் சொல்லக்கூடாது. மற்ற கட்சிகளைப் போல இதையும் எதிர்க்கட்சியாக தான் விமர்சிக்க வேண்டும். அதேபோல தேசியமும் திராவிடமும் கலந்தது தான் எங்களது கட்சியின் கொள்கை எனக் தவெக வினர் கூறி வருகின்றனர். ஆனால் இது குறித்து எந்த ஒரு விளக்கத்தையும் யாரும் கொடுக்கவில்லை.
அதேபோல பாஜக மற்றும் திமுகவின் ரகசிய கைக்கூலியாக விஜய் இருப்பாரோ என்று சந்தேகமும் எழுந்துள்ளது. தற்போது வரை சென்னையில் போராடிய தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு அறிக்கை கூட வெளியிவிடவில்லை. மேலும் தனது கட்சியில் அம்பேத்கர் மற்றும் ஈவேராவை கொள்கை தலைவர் என கூறி வருகிறார் ஆனால் தற்போது வரை கவின் ஆணவ படுகொலைக்கு எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இதைப் பற்றி பேசினால் அவரது வாக்கு வங்கியை குறையும் என்பதால் வாய் திறக்காமல் உள்ளார். மாறாக லாக்கப் மரணமடைந்த அஜித்குமார் வழக்கில் மட்டும் தலையீடு செய்தார். அதேபோல நாம் தமிழர் கட்சி தற்போது வரை தனித்து தான் இருக்கிறது. அதிமுக பாஜக கூட்டணி சரி வராததால் மீண்டும் விஜய் பக்கம் எடப்பாடி திரும்பி உள்ளார்.
இதனால் கட்சிக்குப் பின்னணியில் மறைமுக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. குறிப்பாக தொகுதி பங்கீடு குறித்து தான் பேரம் நடந்து கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.