திரைப்பட தயாரிப்பாளர் அன்பு செழியன் வீட்டில் திடீர் ஐ.டி ரெய்டு? சோதனையின் போது அவர் அங்கு இல்லையா?..

0
362
Sudden IT raid on filmmaker Anbu Chehyan's house? Was he not there during the trial?.
Sudden IT raid on filmmaker Anbu Chehyan's house? Was he not there during the trial?

திரைப்பட தயாரிப்பாளர் அன்பு செழியன் வீட்டில் திடீர் ஐ.டி ரெய்டு? சோதனையின் போது அவர் அங்கு இல்லையா?..

திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.என் அன்புச்செழியன் இவர் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.அதனையடுத்து ரிலீஸ் ஆகும் படத்தை வாங்கி விநியோகிப்பதும் போன்ற பல  தொழிலை செய்து வருகின்றார்.

மேலும் இவர் வெள்ளைக்கார துரை, தங்க மகன், மருது மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் வெற்றிகரமாக  திரையரங்குகளில் பல நாட்கள் ஓடியது.இந்நிலையில் இவர் அளவுக்கு அதிகமாக வருமானம் ஈட்டியதாக கூறப்படுகிறது.

எனவே இவருக்கு சொந்தமான 40 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிகாலையிலிருந்து சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அன்புச்செழியன் அவரது உறவினர்கள் மற்றும் அவரின் சகோதரர் அழகர்சாமியின் வீடு அவருக்கு சொந்தமான அலுவலகங்களில் அதிரடி சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனைகள் எல்லாம் முடித்த பின்னரே அன்புச்செழியன் எங்கு இருக்கிறார்? ஏதேனும் முறையீடு செய்துள்ளாரா?பணம் பதுக்கி இருக்கிறாரா ? என தகவல் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளார்கள். இந்த தகவலறிந்த திரை உலகினர்கிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் தற்போது திரைப்படத் துறையில் முன்னணி தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு
என்பவர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous article“தோல்விக்கு காரணம் இதுதான்…” கேப்டன் ரோஹித் ஷர்மா ஓபன் டாக்!
Next articleகாவல் ஆய்வாளர் முன்னிலையில்கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here