
PMK: பாமக கட்சிக்குள் அதிகாரத்தன்மை போட்டியானது நடைபெற்று வருகிறது. தலைமை பதவியானது அப்பாவுக்கா அல்லது மகனுக்கா என்பது தற்போது வரை தெரியவில்லை. ஒருவர் மாற்றி ஒருவர் தங்களுக்கு ஆதரவாக நிற்கும் நிர்வாகிகளை நீக்குவதும் மாற்றுவதையும் வேலையாக வைத்து வருகின்றனர். இதனால் கட்சியின் மதிப்பானது பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதன் விளைவாக வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைக்கும் கட்சிகள் இவர்கள் வைக்கும் டிமான்டை கூட ஏற்காது.
இந்த சூழலில் தான் இன்று தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் மாநில நிர்வாகி குழு கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளனர். இந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சி சார்ந்த முக்கிய முடிவு எடுக்கப்படும் தெரிவித்துள்ளனர். அதாவது கட்சியை இரண்டாக பிரிக்க அதிக வாய்ப்புள்ளதாம். பாமக பெயருடன் கட்சியானது ராமதாஸ் கைக்கு செல்லவும், இவருக்கு அடுத்து மகள் வழி பேரனுக்கு பொறுப்புகளை வழங்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதை வைத்து பார்க்கையில் அன்புமணி புதிய கட்சியை தொடங்க வேண்டும். மேற்கொண்டு ராமதாஸ் நியமனம் செய்யும் நிர்வாகிகளை அன்புமணி நீக்கும் செயலை ஒடுக்கவும் முக்கிய முடிவு எடுக்கப்படுவதாக கூறுகின்றனர். சமீபத்தில் பாமக எம் எல் ஏ அருளுக்கு பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்ட நிலையில் அவரை அன்புமணி நீக்கியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அருள் கொரடாவில் இருப்பதால் அவரை நீக்க முடியாது என்ற அறிவிப்பை ராமதாஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.