எடப்பாடியுடன் பாஜக முக்கிய புள்ளி திடீர் சந்திப்பு!! அதிமுக வில் இணைய பேச்சுவார்த்தை!!

 

 

ADMK BJP: பாஜக கட்சியில் இருந்து விலகி அதிமுக கட்சியில் சேர்ந்து மீண்டும் அதிமுக கட்சியில் இருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்த முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் மைத்ரேயன் அவர்கள் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன் மூலமாக மீண்டும் மைத்ரேயன் அவர்கள் அதிமுக கட்சியில் இணையவுள்ளதாக பேசப்படுகின்றது.

அதிமுக கட்சியின் சார்பாக ராஜ்யசபா உறுப்பினராக இருந்த மைத்ரேயன் அவர்கள் சென்னையில் பிறந்தவர் ஆவார். இவர் சென்னையில் மருத்துவராக பணிபுரிந்து வந்த இவர் தொடக்கத்திலேயே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்துள்ளார்.

பின்னர் அடுத்தடுத்து பற்பல பதவிகளை வகித்த மைத்ரேயன் அவர்கள் கடந்த 2000ம் ஆண்டு பாஜக கட்சியில் இருந்து விலகினார். பின்னர் அதிமுக கட்சியில் இணைந்த மைத்ரேயன் அவர்களுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை அதிமுக கட்சி வழங்கியது.

இதையடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைந்த பின்னர் ஒரே கட்சியாக இருந்த அதிமுக கட்சிக்கு இடையில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து  பன்னீர் செல்வம் அவர்கள் தலைமையில் ஒரு அணியும் சசிகலா தலைமையில் ஒரு அணியும் உருவானது. இதில் மைத்ரேயன் அவர்கள் பன்னீர் செல்வம் அவர்களின் தலைமையிலான அதிமுக அணியில் இணைந்தார்.

பின்னர் மீண்டும் 2023ம் ஆண்டு அதிமுக கட்சியிலிருந்து விலகிய மைத்ரேயன் அவர்கள் பாஜக கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அவர்களை மைத்ரேயன் அவர்கள் சந்தித்து பேசியுள்ளார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புடன் 2023ம் ஆண்டு பாஜக கட்சியில் இணைந்த மைத்ரேயன் அவர்களுக்கு பாஜக கட்சி முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதால் இவர் மீண்டும் பாஜக கட்சியில் இருந்து விலகி அதிமுக கட்சியில் இணையவுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்காகத் தான் மைத்ரேயன் அவர்கள் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து பேசியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.