தமிழக அரசின் திடீர் உத்தரவு! இன்று முதல் புதிய ரேஷன் அட்டைகளுக்கு ஒப்புதல்!
கொரோனா தொற்று காரணமாக மக்கள் அனைவரும் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.இந்நிலையில் மக்கள் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தியது.அந்தவகையில் நமது அரசாங்கம் மக்களின் நலன் கருதி ரூ.4000 நலத்திட்டம் உதவியை வழங்கியது.அத்தோடு இலவசமாக 14 பொருட்கள் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தினர்.குடும்ப அட்டை உள்ளவர்கள் அனைவரும் அத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர்.
அதனையடுத்து புதிதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தனர்.தற்போது அதிகப்படியாக குடும்ப அட்டைக்கோரி விண்ணப்பித்த படிவங்கள் குவிந்துள்ளது.அதனால் தமிழக அரசு அப்படிவத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆணை பிறப்பித்துள்ளது.அதுமட்டுமின்றி ரேஷம் அட்டை தாரர்கள் பொருட்கள் வாங்கிய பிறகு கை ரேகை வைப்பது கட்டாயமாக்கப்பட்டது.
தற்போது கொரோனா தொற்று காலம் என்பதால் அதனை ரத்து செய்திருந்தனர்.ஆனால் தற்போது கொரோனா தொற்றானது குறைந்த காரணத்தினால் மீண்டும் கைரேகை வைப்பதை அமல்படுத்துமாறு கூறியுள்ளனர்.தற்போது கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு போடப்பட்ட நிலையில் மக்களுக்கு அரசாங்கம் பல நலத்திட்டங்களை அமல்படுத்தியது.அதில் இலவசாமக் 14 பொருட்கள் தரும் திட்டம் தற்போது முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது.
தற்போது புதிதாக விண்ணப்பித்த ரேஷன் அட்டைகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் வேண்டும் என்பதால் தமிழக அரசு ஒப்புதல் அளிக்காமல் இருந்தனர்.அதுமட்டுமின்றி கொரோனா தொற்று வேகமாக பரவி வந்ததாலும் களப்பணியாளர்கள் விசாரணைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்ததாலும் தமிழக அரசு எந்தவித ஒப்புதலையும் அளிக்காமல் இருந்தது.
அதனையடுத்து தற்போது புதிய ரேஷன்கார்டு ஒப்புதல் மற்றும் புதிய ரேஷன்கார்டு அச்சிடப்படும் பணியை தொடங்கக் கூறி தற்போது தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.அதுமட்டுமின்றி சுப்ரீம்கோர்ட் ஆர்டரின் பேரில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை வரும் 31 ம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களும் அமல்படுத்துமாறு கூறியுள்ளது.இத்திட்டத்தின் மூலம் அனைத்து ரேஷன் அட்டை தாரர்களும் எந்த ஊரில் இருந்துக்கொண்டும் தங்களின் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.