தமிழகத்தில் பால் வினியோகம் திடீர் நிறுத்தம்? ஏற்பட்ட புதிய சிக்கலினால் சிரமம் அடையும் பொது மக்கள்!

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் பால் வினியோகம் திடீர் நிறுத்தம்? ஏற்பட்ட புதிய சிக்கலினால் சிரமம் அடையும் பொது மக்கள்!

Parthipan K

Updated on:

Sudden stoppage of milk distribution in Tamil Nadu? The common people will suffer due to the new problem!

தமிழகத்தில் பால் வினியோகம் திடீர் நிறுத்தம்? ஏற்பட்ட புதிய சிக்கலினால் சிரமம் அடையும் பொது மக்கள்!

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் அந்த கோரிக்கைக்கு ஆவின் நிறுவனம் செவி சாய்க்காததால் திட்டமிட்டபடி பால்  நிறுத்த போராட்டம் நடைபெறும். கறவை மாடுகளுடன் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம் என கூறினார்

இந்நிலையில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் ஒரு லிட்டருக்கு ரூ 32 க்கு கொள்முதல் செய்யப்படுகின்றது. மேலும் அவர்களிடமிருந்து இதர பால் பொருட்களும் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆவின் நிர்வாகத்துக்கு வழங்கப்படும் ஒவ்வொரு லிட்டர் பாலும் ரூ.7 ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் அது பற்றி ஆவின்  நிர்வாகம் நிதி நெருக்கடி இருப்பதால் கொள்முதல் தொகையை அதிகரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்ததால் தற்போது போராட்டம் நடத்துவதாக பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

மேலும் இதனால் ஆவின் பால் விநியோகம் பாதிப்படையும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகின்றது. தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி மார்ச் 17ஆம் தேதி பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் எனவும் பால் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.