சென்னை தலைமைச்  செயலகத்தில் ஏற்பட்ட திடீர் அதிர்வு!! பதறியடித்து ஓடிய ஊழியர்கள்!!

Photo of author

By Vijay

சென்னை தலைமைச்  செயலகத்தில் ஏற்பட்ட திடீர் அதிர்வு!! பதறியடித்து ஓடிய ஊழியர்கள்!!

Vijay

Sudden tremors in Chennai headquarters

Politics: தலைமை செயலகத்தில் திடீரென அதிர்வு பணிபுரியும் ஊழியர்கள் வெளியே ஓட்டம்.

சென்னை தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில்  திடீரென அதிர்வு உணரப்பட்டதால் அந்த மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் பதறியடித்து வெளியே ஓடினர். இந்த அதிர்வானது  ‘ஏர் கிராக்’ காரணமாக இந்த அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்கள் இந்த நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஏ.வா.வேலு, இந்த அதிர்வு குறித்து பயப்பட வேண்டாம் இந்த அதிர்வானது ‘ஏர் கிராக்’ காரணமாக ஏற்பட்டுள்ளது சம்பந்தப்பட்ட  பொறியாளர் துறையிடம் தெரிவித்துள்ளோம். மேலும் கட்டிடத்தில் விரிசல் ஏதும் இல்லை. இந்த கட்டிடம் முழுமையாக உறுதி தன்மையுடன் உள்ளது என்றும்,  உடனடியாக சரி செய்யப்படும் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து நாமக்கல் கவிஞர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் கூறுகையில் டைல்ஸ்கள் வரிசையாக உடைந்தது, இந்த அதிர்வினால் நாங்கள் அச்சத்தில் அனைவரும் வேகமாக வெளியேறினோம், பிறகுதான் ‘ஏர் கிராக்’ காரணமாக அதிர்வு ஏற்பட்டுள்ளது. நாங்கள் நலமாக இருக்கிறோம் எந்தவித பிரச்சனையும் இல்லை. இது பற்றி நில அதிர்வு ஏதும் இல்லை ஆனால் அது போன்ற வதந்தி பரவுகிறது என்றும் கூறினர்.