
ADMK DMK: திமுக தனது கூட்டணியை உறுதிப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் மும்மரம் காட்டி வருகிறது. அந்த வகையில் சீமான், பிரேமலதா விஜயகாந்த், ஓபிஎஸ் உள்ளிட்டோருடன் நட்பு பாராட்டி வருகின்றனர். அதிலும் தேமுதிக கூட்டணி உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதிமுக எம்பி சீட் தராதது தான் இதற்கு காரணம் எனக் கூறுகின்றனர். இதனால் சமீப காலமாக தேமுதிக ஸ்டாலினிடம் நெருக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர்களுடன் ஸ்டாலின் சந்திப்பது எடப்பாடிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்த செய்யும். ஏனென்றால், இவரும் மாற்று கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்த போது யாரும் வரவில்லை. அதுவே ஸ்டாலின் அழைத்த போது சென்றதற்கு ஆளும் கட்சி என்ற ஒரு காரணம் இருந்தாலும், அவர் அனைத்து போராட்ட களத்திற்கும் சிறு கட்சிகளுடன் உடன் இருந்துள்ளார்.
அதுவே எடப்பாடி ஆளும் கட்சியாக இருந்தபோது சிறு கட்சியினருடன் எந்த ஒரு போராட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. அதேபோல பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அவர்களின் முடிவு எந்த சூழலிலும் மாறலாம் என்ற பேச்சு இருக்கிறது. இதனால் எடப்பாடி மீதான நண்பகத்தன்மை குறைந்துவிட்டது. இதில் தேமுதிக கூட்டணி மட்டும் ரகசியமாக உறுதியாகி உள்ள நிலையில் ஓபிஎஸ் , சீமான் உள்ளிட்டோர் தேர்தல் நெருங்கும் சமயத்தில் இணைய அதிக வாய்ப்புள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.