குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை செய்த வழக்கில் தாயாரினால் ஏற்பட்ட திடீர் திருப்பம்!

0
160
Sudden twist by the mother in the case of the woman who committed suicide by killing the children!
Sudden twist by the mother in the case of the woman who committed suicide by killing the children!

குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை செய்த வழக்கில் தாயாரினால் ஏற்பட்ட திடீர் திருப்பம்!

ஆவடியை அடுத்த திருநின்றவூர் என்ற ஊரில் நடுக்குத்தகை திலீபன் நகரைச் சேர்ந்தவர், ரமேஷ் 28 வயதான இவர் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவரது மனைவி கௌரி 24 வயதான இவர், இவர்களுக்கு தீக்க்ஷிதா என்ற 3 வயது குழந்தையும், அஸ்வின் என்ற ஒன்றரை வயது மகனும் உள்ளனர். கடந்த 18ம் தேதி தனது 2 குழந்தைகளுடன் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்து தானும் தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.

அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர். கொலைக்கான காரணத்தையும் தேடி வந்து இருந்தனர். இது தொடர்பான ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அருந்ததி பாளையம் பகுதியில் வசித்து வந்த தேசம்மாள் 55 வயதான இவர் கௌரியின் தாயார். அவர் திருநின்றவூர் போலீசில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் இதுதொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் விசாரணை செய்தார். விசாரணையில் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதும், மது குடிக்க பணம் கேட்டு மனைவியை துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் மனமுடைந்து அவர் தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார் என்றும், கௌரியின் தாயார் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பட்டாபிராம் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் திருநின்றவூர் போலீசார் கௌரியின் கணவனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleமாரியம்மன் கோவிலில் விட்டுச் சென்ற மூன்று மாத ஆண் கைக்குழந்தை!!
Next articleதிமுக வின் 1000 ரூபாய் உதவித்தொகை வேண்டுமா?? இதை செய்யுங்கள்!!