திடீரென்று குறைந்த கேஸ் சிலிண்டர் விலை! இந்த மாதம் முழுவதும் இதுதான் ரேட்!

0
185
#image_title

திடீரென்று குறைந்த கேஸ் சிலிண்டர் விலை! இந்த மாதம் முழுவதும் இதுதான் ரேட்!

வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை மாதம் தேறும் அதிகரித்து வந்த நிலையில் புத்தாண்டு தொடக்கமான ஜனவரி மாதம் விலை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை கடந்த 2023 வருடம் சில மாதங்களுக்கு முன்னர் 1100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 200 ரூபாய் குறைக்கப்பட்டு 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அன்றிலிருந்து இன்று வரை வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

ஆனால் வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் அதிகரித்தும், குறைத்தும் வருகின்றது. அந்த வகையில் கடந்த 2023ம் வருடம் டிசம்பர் மாதம் வணிக பயன்பாட்டுக்கு பயன்படும் சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதையடுத்து 2023ம் வருடம் டிசம்பர் மாதம் 22ம் தேதி வணிக பயன்பாட்டுக்கு பயன்படும் கேஸ் சிலிண்டர் விலை 39 ரூபாய் குறைக்கப்பட்டு 1929 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் புத்தாண்டு தொடக்கமான 2024ம் வருடம் ஜனவரி மாதம் வணிக பயன்பாட்டுக்கு பயன்படும் கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

அதன்படி வணிகப் பயன்பாட்டுக்காக பயன்படும் 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் 4.50 ரூபாய் குறைக்கப்பட்டு 1924.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதே போல வீட்டு உபயோகத்திற்காக பயன்படும் 14 காலை எடை கொண்ட கேஸ் சிலிண்டர் 918.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.