திடீரென பற்றியெரிந்த லாரி:!கோவில்பட்டி அருகே பரபரப்பு!
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதிக்கு அருகே உள்ள ஆளவந்தான் குலத்தைச் சேர்ந்த மைக்கேல் என்பவருக்கு சொந்தமான லாரியானது கோவையிலிருந்து தக்கலை பகுதிக்கு பஞ்சிலோடு ஏற்றிச் சென்று கொண்டிருந்தது.
இந்த லாரியை சுரேஷ் என்னும் 27 வயதான இளைஞர் ஒருவர் ஒட்டிவந்தார்.இவர் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள k.கைலாசபுரத்தை சேர்ந்தவர்.லாரியானது கயத்தாறு பகுதியை கடந்து வரும் பொழுது லாரியின் பக்கவாட்டிலுள்ள இரும்பு தகரம் உடைந்துள்ளது.இதனை கண்டறிந்த சுரேஷ், k.கைலாச புரத்தில் உள்ள வெல்டிங் பட்டறைக்கு லாரியை கொண்டு சென்றார்.அங்கு உடைந்த பக்கவாட்டு தகரத்தை வெல்டிங் மூலம் பொருத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்பொழுது திடீரென்று தீப்பொறிகள் பஞ்சின் மீது விழுந்து,பஞ்சு தீப்பற்றியெரிய ஆரம்பித்தது.இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீ பரவாதவாறு அணைக்க முயன்றனர்.இருப்பினும் காற்றின் வேகத்தின் காரணமாக தீயானது லாரி முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனைக் குறித்து தகவலறிந்த ஓட்டப்பிடாரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை முழுவதுமாக அணைத்தனர்.இருப்பினும் பஞ்சு முழுவதும் எரிந்து,லாரியின் பாகங்களும் முழுமையாக சேதமடைந்தன.இந்த சம்பவம் குறித்து நாரைக்கிணறு காவல் உதவி ஆய்வாளர் முருகன் என்பவர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.