விஜய் சுதா கொங்கரா சந்திப்பில் நடந்தது என்ன? ஆச்சரிய தகவல்

0
149

தளபதி விஜய்யை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேரில் சந்தித்து ’தளபதி 65’ படத்தின் ஒன் லைன் கதையை இயக்குனர் சுதா கொங்காரா கூறியதாகவும் இந்த கதை விஜய்க்கு பிடித்திருந்தாலும் முழு கதையை தான் கேட்ட பின்னரே முடிவு சொல்ல முடியும் என்று விஜய் தரப்பில் கூறியதாகவும் தெரிகிறது

இதனை அடுத்து இந்த வார இறுதியில் விஜய்யை மீண்டும் சந்திக்கும் இயக்குனர் சுதா கொங்காரா முழு கதையையும் கூற இருப்பதாகவும் அந்த கதையை கேட்டபின் விஜய் அந்த கதை திருப்தியாக இருந்தால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டு விடுவார் என்றும் அதன்பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் கூறிய கதையும் விஜய்க்கு பிடித்துள்ளதால் சுதா கொங்காரா இல்லாவிட்டால் லோகேஷ் தான் ‘தளபதி 65’ படத்தின் இயக்குனர் என்றும் இந்த இருவரில் யார் ‘தளபதி 65’ படத்தின் இயக்குனர் என்பது இன்னும் ஒருசில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

இயக்குனர் சுதா கொங்காரா தற்போது ‘சூரரை போற்று’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியில் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Previous articleகடவுள் இல்லை இல்லவே இல்லை என்று கூறிவிட்டு அப்பன் முருகனிடம் அருள்வாங்கிய நாத்திகவாதி..!!
Next articleதலைவி சர்ச்சையும் சமாதானமும்! நடந்தது என்ன?