மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியா? அப்போ அத்திப் பழங்களை இப்படி சாப்பிடுங்க!

Photo of author

By Sakthi

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியா? அப்போ அத்திப் பழங்களை இப்படி சாப்பிடுங்க!!
இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனையான மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய உதவி செய்யும் மருத்துவ வழிமுறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வளர்ந்து வரும் இந்த காலத்தில் அனைவரும் அவர்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடுகிறார்கள். இது தான் மலச்சிக்கல் பிரச்சனைக்கு முக்கியமான முதல் காரணம் ஆகும். இவர்கள் அனைவரும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவுகளை சாப்பிடுவது இல்லை.
இதன். காரணமாக அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகின்றது. இந்த மலச்சிக்கல் பிரச்சனையை வெறும் இரண்டு பொருட்களை பயன்படுத்தி சரி. செய்யலாம். அது எவ்வாறு. என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* அத்திப் பழம்
* பால்
செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு. சிறிய பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதன் பின்னர் இதில் சுத்தம் செய்து வைத்துள்ள அத்திப் பழங்களை சேர்த்து வேக வைக்க வேண்டும்.
அத்திப் பழங்கள் நன்றாக வெந்த பின்னர் அடுப்பை அனைத்து விட வேண்டும். பாலில் வேக வைக்த அத்திப் பழங்களை இரவு நேரத்தில் தூங்கச் செல்வதற்கு முன்னர் சாப்பிட வேண்டும். மறுநாள் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது.