திணறும் திமுக!! அரசியல் களத்திலும் ஹீரோவாகும் விஜய்.. மவுசு குறையும் உதயநிதி!!

0
301
suffocating-dmk-vijay-is-also-a-hero-in-the-political-field
suffocating-dmk-vijay-is-also-a-hero-in-the-political-field

TVK DMK: தமிழக அரசியல் களத்தில் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவரைப்போல களம், சரத்குமார் என மற்ற நடிகர்கள் அரசியலுக்குள் நுழைந்த போது கூட இவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்பதே உண்மை. ஆனால் விஜய்க்கு அலாவதியான வருகையை தமிழக மக்கள் அளித்து வருகின்றனர். தனக்கு மார்க்கெட் இருக்கும் போதே அரசியலுக்குள் நுழைவது தான் இதற்கு முக்கிய காரணம். இவர் தனது முதல் மாநாட்டிலேயே கொள்கை மற்றும் அரசியல் எதிரி யார் என்பதை கூறிவிட்டார்.

அந்தவகையில் பாஜக-வை காட்டிலும் திமுக இவரை முடக்குவதையே வேலையாக வைத்துள்ளது. இதனால் அவர் பொதுவெளியில் மக்களை சந்தித்தாலும் அதிக நேரம் ஒதுக்காதது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறது. இவையனைத்தும் தவெக கட்சி மீது திமுக வுக்கு உள்ள அச்சத்தை பார்க்க முடிகிறது. நாளடைவில் துணை முதல்வராக உள்ள உதயநிதிக்கான மவுசும் குறைந்து வருகிறது. விஜய்க்கு கிடைக்கும் வரவேற்பு இவருக்கு இல்லை. இதுரீதியான பேச்சு அறிவாலையம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

விஜய் தனது பிரச்சார பரப்புரையை இன்று முதல் திருச்சி மரக்கடையில் தொடங்கியுள்ளார். விஜய்க்கு இணையாக தனது மகனை ஈடு கொண்டு வர வேண்டும் என்பதற்காக மூன்று நாட்களுக்கு முன்பே உதயநிதி தனது பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். இம்முறை சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் போட்டி என்பதை விட விஜய்க்கும் உதயநிதிக்கும் தீவீரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உதயநிதியை காட்டிலும் விஜய் ஸ்கோர் செய்தால் திமுக-விற்கே அது பெரும் இழப்பீடை கொடுக்கும்.

Previous articleகேள்விக்குறியாகும் எடப்பாடி பதவி.. மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கப்போகும் சசிகலா!!
Next articleH3N2 எச்சரிக்கை: சாதாரண காய்ச்சலைவிட ஆபத்தானது – அறிகுறிகள் & பாதுகாப்பு வழிகள்