சானிடைசரை குடித்து தற்கொலை செய்ய முயன்ற இளம் பெண்! சென்னையை வாலிபர் அதிரடி கைது!

Photo of author

By Sakthi

சானிடைசரை குடித்து தற்கொலை செய்ய முயன்ற இளம் பெண்! சென்னையை வாலிபர் அதிரடி கைது!

Sakthi

Updated on:

சென்னை நொளம்பூர் பகுதியைச் சார்ந்தவர் சம்பக் சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் தியாகராய நகரைச் சார்ந்த 33 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே போரூரை அடுத்த ஐயப்பன் தாங்கல் பகுதியில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஒரு வருட காலமாக கணவன், மனைவி போல சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையே உண்டான தகராறில் விரக்தி அடைந்த அந்தப் பெண் சானிடைசர் மற்றும் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

உடனடியாக அந்த பெண்ணை அவருடைய உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கே அவர் சிகிச்சை பெற்று வருகிறார் அவரிடம் நீதிபதியும் மற்றும் காவல் துறையினர் வாக்கு மூலம் பெற்றனர்.

சம்பக்கும், அந்த இளம் பெண்ணும் கடந்த ஒரு வருட காலமாக திருமணம் செய்யாமலே ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர் இதற்கு நடுவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சம்பக்கிற்கு வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து இருவருக்கும் இடையே உண்டான தகராறில் இளம் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்தது தெரிய வந்தது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக சம்பத்தை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.