பழனிசாமி என்ற பெயர் கொண்ட நடிகர் சிவகுமார் காக்கும் கரங்கள் என்ற படத்தில் மூலம் 1965 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் நுழைந்தவர். இதுவரை 195 திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார், முக்கியமாக தமிழ் சினிமாவில் மட்டுமே. அவர் மூன்று தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும் இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிவகுமார் அவர்கள் லட்சுமி குமாரி என்பவரை திருமணம் செய்து இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளை பெற்றெடுத்தார். இரு மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் திரையுலகில் கதாநாயகனாக வலம் வருகிற நிலையில், இவருடைய மகளான பிருந்தா பின்னணி இசை பாடகராக திகழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் இவருடைய மூத்த மகனான நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறாமல் போனது குறித்து சிவகுமாரினுடைய மருமகளான ஜோதிகா அவர்கள் பேசிய வீடியோ மிகவும் வைரலானது. இத்திரைப்படம் நினைத்த அளவு வெற்றி பெறவில்லை என்றாலும் தன்னுடைய அடுத்த படத்தில் ரசிகர்களுக்கான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நடிப்பேன் என நடிகர் சூர்யா அவர்கள் தற்பொழுது தன்னுடைய 45 வாது திரைப்படத்தில் பிஸியாகி உள்ளார்.
இந்த தருணத்தில் பேட்டி ஒன்று தன்னுடைய குடும்பம் பற்றி பேசிய சிவகுமார் அவர்கள் தற்கொலை குறித்த தன்னுடைய எண்ணம் பற்றியும் பேசியுள்ளார். அது பின்வருமாறு :-
தன்னுடைய சிறுவயதில் அம்மா அடித்ததற்காக தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாகவும், அதற்கு பின் அது தவறு என உணர்ந்து இதுவரை அது போன்ற எண்ணங்களை முற்றிலுமாக தகர்த்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் பேசியவர், தற்கொலை என்பது எதற்கும் தீர்வாகாது என்றும் யாரும் தற்கொலை செய்து கொள்ள நினைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.