Home Breaking News குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படும்… உங்களால் ஒன்றும் செய்ய இயலாது… பாஜக தலைவர் பேட்டி!!

குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படும்… உங்களால் ஒன்றும் செய்ய இயலாது… பாஜக தலைவர் பேட்டி!!

0
குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படும்… உங்களால் ஒன்றும் செய்ய இயலாது… பாஜக தலைவர் பேட்டி!!

 

குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படும்… உங்களால் ஒன்றும் செய்ய இயலாது… பாஜக தலைவர் பேட்டி…

 

குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும். உங்களால்(மம்தா பானர்ஜி) ஒன்றும் செய்ய முடியாது என்றும் எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியித் நீங்கள்(மம்தா பானர்ஜி) உள்ளீர்கள். ஆனால் இந்தியா உங்கள் வசம் இல்லை என்று பாஜக கட்சியின் சுகன்தா முஜும்தார் அவர்கள் கூறியுள்ளார்.

 

இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வீழ்த்த வேண்டும் என்று I.N.D.I.A என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த எதிர்கட்சிகளின் மூன்றாவது கட்ட கூட்டம் மும்பையில் நடைபெறவுள்ளது.

 

பிரதமர் நரேந்திர மோடி அவர்களை எதிர்க்கும் அரசியல் தலைவர்களில் முக்கிய தலைவராக மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் உள்ளார். மேலும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் “பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்னும் ஆறு மாதத்திற்குத்தான் பிரதமாராக இருப்பார். அதன் பின்னர் மக்களால் அவர் தோற்கடிக்கப்படுவார்” என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

 

இந்நிலையில் மேற்குவங்க மாநில பாஜக கட்சியின் தலைவர் சுகன்தா முஜும்தார் அவர்கள் நீங்கள்(மம்தா பானர்ஜி) எதிர்க் கட்சிகளின் கூட்டணியான I.N.D.I.A கூட்டணியில் இருக்கலாம். ஆனால் இந்தியா உங்களுக்காக இல்லை” என்று கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக மேற்குவங்க மாநில பாஜக கட்சியின் தலைவர் சுகன்தா முஜும்தார் அவர்கள் “நீங்கள்(மம்தா பானர்ஜி) எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணியில் உள்ளீர்கள். ஆனால் இந்தியா உங்களுடன் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் இந்தியா இருக்கின்றது. குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படும். அதை மம்தா பார்ஜி உங்களால் தடுத்து நிறுத்த முடியாது. உங்களுடைய(மம்தா பானர்ஜி) ஊழல் பற்றி மேற்குவங்க மாநிலத்தின் மக்கள் தெரிந்து வைத்துள்ளார்கள். நேரம் வரும் பொழுது மக்கள் உங்களை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவார்கள்” என்று கூறினார்.

 

இதற்கு முன்னதாக சுகன்தா முஜும்தார் அவர்கள் இமாம்களுடன் நடந்த கூட்டத்தில் “மதம் அரசியலுடன் எந்தவொரு நிலையிலும் கலக்கக் கூடாது. பா.ஜ.க தன்னைப் பற்றி என்ன கூறினாலும் சரி. ஆனால் யாருடனும் மதம் தொடர்பான மோதல் கிடையாது” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.