சுமித் மாலிக் தடையை மீறி அப்பீல்! ஊக்க மருந்து சோதனை!

Photo of author

By Hasini

சுமித் மாலிக் தடையை மீறி அப்பீல்! ஊக்க மருந்து சோதனை!

பல்கேரியா தலைநகர் சோபியாவில் கடந்த மே மாதம் நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்றில், உலக மல்யுத்தப் போட்டியில் ஆண்களுக்கான, 125 கிலோ எடை பிரிவில், இந்திய வீரரான சுமித் மாலிக்  பங்கேற்றார். அதில் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அந்த போட்டியின் போது நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை, உலக மல்யுத்த சம்மேளனம் 2 ஆண்டு தடை விதித்தது.

28 வயதான அவருக்கு விதித்த தடையை எதிர்த்து அப்பீல் செய்ய அவருக்கு ஒரு வார காலம் அவகாசமும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சுமித் மாலிக் மனு தாக்கல் செய்ய முடிவு செய்து இருக்கிறார். மேலும் அதில் தெரியாமல் தான் இழைத்த தவறுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கும்படி வேண்டுகோள் விடுப்பார் என்றும் தெரிகிறது.

இளைய சமூகத்தினர் பெருமைக்காக இத்தகைய குற்றங்களை செய்கின்றனர். பழக்கமும் படுத்திக் கொள்கின்றனர். அந்த கெட்ட பழக்கத்தின் காரணமாக அவர்களது வாழ்க்கை சீராக செல்லாமல் சீரழிந்து போகிறது.