Summer Drink: ஃப்ரூட் கஸ்டர்டு மற்றும் ரோஸ் மில்க்!! கடையில் கிடைக்கு அதே சுவையில் வீட்டில் தயாரிக்கலாம்!!

Photo of author

By Divya

Summer Drink: ஃப்ரூட் கஸ்டர்டு மற்றும் ரோஸ் மில்க்!! கடையில் கிடைக்கு அதே சுவையில் வீட்டில் தயாரிக்கலாம்!!

கோடையில் உங்கள் உடலை சூட்டில் இருந்து காத்துக் கொள்ள குளுமையான ஃப்ரூட் கஸ்டர்டு மற்றும் ரோஸ் மில்க் செய்து குடிப்பது நல்லது.

1.ஃப்ரூட் கஸ்டர்டு

தேவையான பொருட்கள்:-

1)காய்ச்சாத பால் – 1/2 லிட்டர்
2)கஸ்டர்டு பவுடர் – 2 தேக்கரண்டி
3)ஆப்பிள்,வாழைப்பழம்,மாதுளை,மாம்பழம் – 1/2 கப் அளவு(பொடியாக நறுக்கியது)

செய்முறை:-

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1/2 லிட்டர் அளவு பசும் பால் ஊற்றவும்.இந்த பாலை 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.பின்னர் அதில் 2 தேக்கரண்டி கஸ்டர்டு பவுடர் சேர்த்து கலந்து ஒரு நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பாலை நன்கு ஆற விடவும்.இதனிடையே ஆப்பிள்,வாழைப்பழம்,மாதுளம் பழம்,மாம்பழம் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரை கப் அளவு எடுத்துக் கொள்ளவும்.

காய்ச்சிய பால் நன்கு ஆறியதும் நறுக்கிய பழங்களை போட்டு கலந்து ப்ரிட்ஜில் 2 முதல் 3 மணி நேரம் வரை வைக்கவும்.பின்னர் எடுத்து பார்த்தால் சுவையான ஃப்ரூட் கஸ்டர்டு தயாராகி இருக்கும்.இந்த முறையில் ஃப்ரூட் கஸ்டர்டு செய்வது மிகவும் சுலபமாகவும்,கடையில் கிடைக்கும் அதே சுவையிலும் இருக்கும்.

2.ரோஸ் மில்க்

தேவையான பொருட்கள்:-

1)பால் – 1 கிளாஸ்
2)பிங்க் புட் கலர் – 1/2 தேக்கரண்டி
3)ரோஸ் எசன்ஸ் – 1 தேக்கரண்டி
4)சர்க்கரை – 3 தேக்கரண்டி
5)ஐஸ்கட்டி – சிறிதளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி 2 முதல் 3 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.பின்னர் அடுப்பை அணைத்து பாலை நன்கு ஆற விடவும்.

அதன் பின்னர் பாலில் பிங்க் புட் கலர்,ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.பிறகு வெள்ளை சர்க்கரை மற்றும் ஐஸ்கட்டி சேர்த்து கலந்து விட்டால் சுவையான ரோஸ் மில்க் தயார்.இந்த ரோஸ் மில்க் சுவையாக இருப்பதோடு உடலுக்கு குளிர்ச்சியையும் கொடுக்கும்.