கடந்த ஆண்டு கோடை காலங்களில் பின்பற்றப்பட்டது போல இந்த ஆண்டும் கோடைகாலத்தில் பொதுமக்களை அலையவிடாமல் ரேஷன் கடைகளுக்கு வரக்கூடிய ரேஷன் அட்டைதாரர்களை முறையாக வழிநடத்துவது மற்றும் அவர்களிடம் ரேஷன் கடை ஊழியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்றவற்றை வேலூர் மாவட்ட ஆட்சியர் விளக்கி இருக்கிறார்.
இதற்கான பயிற்சி வகுப்பை வேலூர் மாவட்ட ஆட்சியர் வி ஆர் சுப்புலட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் துவங்கி வைத்து, 450 நியாயவிலை கடைகளில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் மற்றும் வேலூரை சுற்றி இருக்கக்கூடிய குடியாத்தம் கே வி குப்பம் பேரணாம்பட்டு வட்டாரங்களில் பணிபுரியக்கூடிய நியாய விலை கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர் என 238 பேர் பங்கேற்று இருப்பதாகவும், இவர்களுக்கான பயிற்சி வகுப்பு ஹோமியோபதி மருத்துவர் மற்றும் மன அழுத்தம் குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு பேசியதாவது :-
நியாயவிலைக் கடைகளில் பணிபுரியக்கூடிய விற்பனையாளர்கள் உணவு பொருட்களை வாங்க வரும் பொதுமக்களிடம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் இது கோடை காலம் என்பதால் அவர்களிடம் கனிவாக பேச வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து விற்பனையாளர்கள் கட்டுணர்கள் பணியில் கடமை பொறுப்பு போன்றவற்றை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் விற்பனையாளர்கள் அவர்களுடைய குறைகளை இணைப்பதிவாளர் அல்லது துணை பதிவாளர்களுக்கு தெரியப்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோடை காலத்தை கருத்தில் கொண்டு மக்களை அலையவிடாமல் ஒரே நேரத்தில் அரிசி பருப்பு போன்ற அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டதை போன்று இந்த ஆண்டும் அதே திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்து இருக்கின்றனர்.