தமிழகத்தில் கோடையிலும் கொட்டி தீர்த்த கனமழை : பூமி குளிர்ந்து மக்கள் மகிழ்ச்சி!

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் பொது இடங்களுக்கு வர வேண்டாம் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்தார்.

தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் தமிழகத்தின் பல இடங்களில் வெய்யில் கடுமையாக வாட்டி வந்தது. மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் பராமரிக்கப்பட்டு வந்தாலும் கடும் வெய்யிலால் வற்ற தொடங்கிவிட்டன.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியில் செல்லும் மக்கள் கோடை வெயிலை தாங்கமுடியாமல் தவித்து வந்தனர். ஊரடங்கு உத்தரவால் பணியில் உள்ள காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், வியாபாரிகள், பத்திரிக்கையாளர் உள்ளிட்ட பலரும் வெய்யிலால் சிரமத்துக்கு ஆளாகினர்.

இந்தநிலையில் தென்தமிழகத்தில் பரமக்குடி மற்றும் விருதுநகர் பகுதிகளில் கோடை மழை கொட்டித் தீர்த்துள்ளது. ஏற்கனவே அதிகம் மழை காணாத இடங்களாக இருந்துவந்த இவ்வூர்களில் பூமி குளிர்ந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சற்று மேகமூட்டம் ஆகவே இருக்கிறது, இதனால் வெய்யிலின் தாக்கம் குறைந்துள்ளது. இதே போன்று தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தால் நீர்நிலைகளிலும் நிரம்பும், மக்களும் நிம்மதி அடைவார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Comment