Summer Skin Care: ஒரு ஸ்பூன் பால் போதும்! ஒரே நாளில் உங்கள் முக அழகு கூடி விடும்!!

Photo of author

By Divya

Summer Skin Care: ஒரு ஸ்பூன் பால் போதும்! ஒரே நாளில் உங்கள் முக அழகு கூடி விடும்!!

கோடை வெயிலில் சருமம் அதிகளவு பாதிப்படைகிறது என்று வருந்தும் பெண்கள் அதிகம்.வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பினால் சிலருக்கு சருமத்தின் கலர் மாறி விடும்.முகம் எண்ணெய் பசையுடன் ஒருவித டல்லடிக்கும்.

இந்த பாதிப்பை சரி செய்ய நீங்கள் ஒரு நிமிடம் ஒதுக்கி கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள் போதும்.

1)காய்ச்சாத பால்
2)ஐஸ் ட்ரே

ஒரு கிண்ணத்தில் 1/4 கப் காய்ச்சாத பால் சேர்த்து கலக்கவும்.இதை ஒரு ஐஸ் ட்ரேயில் ஊற்றி ப்ரிட்ஜில் ப்ரீசரில் வைக்கவும்.3 முதல் 4 மணி நேரத்திற்கு பிறகு பார்த்தால் பால் ஐஸ் கியூப் தயராகி இருக்கும்.

இந்த ஐஸ் கியூப்ஸை முகம் முழுவதும் அப்ளை செய்து மசாஜ் செய்யவும்.ஐஸ் கியூப்ஸ் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை முழுமையாக நீக்க உதவுகிறது.பால்,முகத்தில் உள்ள சுருக்கங்கள்,கொப்பளங்கள்,கரும் புள்ளிகளை நீக்க உதவுகிறது.இந்த பால் ஐஸ் கியூப் முகத்திற்கு ஒருவித புத்துணர்வை கொடுப்பதால் என்றும் இளமை தோற்றத்துடன் காட்சியளிக்க முடியும்.வெயில் காலத்தில் முகத்தின் நிறம் மாறுவது சாதாரண ஒன்று தான் என்றாலும் இவை முக அழகை குறைத்து காட்டிவிடும்.எனவே பால் ஐஸ் கியூப்ஸை முகம் முகத்திற்கு அப்ளை செய்து வந்தால் முகம் வெள்ளை நிறத்திற்கு மாறும்.

அதேபோல் காய்ச்சாத பாலில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் சந்தன தூள் சேர்த்து ஐஸ் ட்ரேவில் வைத்து ஐஸ் கியூப்ஸாக மாறிய உடன் அதை முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் என்றும் இளமை தோற்றத்துடன் இருக்க முடியும்.