கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும்,சரும பிரச்சனைகளை தவிர்க்கவும் இங்கு தரப்பட்டுள்ள தீர்வை பின்பற்றுங்கள்.
டிப்ஸ் 01:
இளநீர்
கோடை காலத்தில் இளநீர் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும்.இளநீரில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
டிப்ஸ் 02:
எலுமிச்சை பானம்
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு எலுமிச்சம் பழச்சாறை பிழிந்து தேன் கலந்து குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கும்.
டிப்ஸ் 03:
கற்றாழை ஜூஸ்
குளிர்ச்சி நிறைந்த கற்றாழையின் ஜெல்லை சுத்தம் செய்து அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.சருமப் பிரச்சனைகள் அனைத்தையும் இந்த கற்றாழை ஜூஸ் சரி செய்யும்.
டிப்ஸ் 04:
மோர்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மோரை தினமும் பருகி வந்தால் உடலில் நீரிழப்பு அபாயம் குறையும்.கோடை வெயிலை தணிக்க மோர் சிறந்த பானமாக திகழ்கிறது.
டிப்ஸ் 05:
மூலிகை ட்ரிங்க்
புதினா,துளசி போன்ற குளிர்ச்சி நிறைந்த மூலிகை இலைகளை பாத்திரத்தில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து தேன் கலந்து பருகினால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
டிப்ஸ் 06:
வெள்ளரி ஜூஸ்
பழுத்த வெள்ளரியில் ஜூஸ் செய்து பருகி வந்தால் உடல் வறட்சியாவது குறையும்.இந்த வெள்ளரி ஜூஸ் சருமப் பொலிவை அதிகரிக்க உதவுகிறது.
டிப்ஸ் 07:
தர்பூசணி ஜூஸ்
தினமும் ஒரு கிளாஸ் தர்பூசணி ஜூஸ் செய்து பருகி வந்தால் சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.உடலில் ஈரப்பதம் அதிகரிக்க இந்த ஜூஸ் செய்து குடிக்கலாம்.அதேபோல் பாதாம் பிசின்,நன்னாரி எசன்ஸ் பயன்படுத்தி சர்பத் செய்து குடித்து வந்தால் கோடை காலத்தில் சருமப் பிரச்சனைகள் வராது.
தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் சருமத்தில் ஈரப்பதம் தக்கவைக்கப்படும்.முலாம் பழம் சாறு,நுங்கு சர்பத்,தேங்காய் நீர் போன்றவற்றை பருகினால் கோடை கால சருமப் பிரச்சனைகள் குணமாகும்.