கருவறையில் சூரிய ஒளி விழுந்த அதிசயம்

0
226

கருவறையில் சூரிய ஒளி விழுந்த அதிசயம்

திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 6 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. அதன் பிறகு நாளுக்கு நாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டமானது அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் இந்த கோவிலில் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மாலை நேரத்தில் சூரியக்கதிர்கள் கோவிலின் கருவறை வரை பாய்ந்து ஆதிகேசவப் பெருமாளின் திருமேனியில் விழும் அதிசயம் நடைபெறும் என்று கூறப்பட்டது.

அதாவது பெருமாளுக்கு உகந்த தமிழ் மாதமான புரட்டாசி மாத தொடக்கத்தில் மாலைச்சூரியனின் பொன்னிற கதிர்கள் பெருமாளின் திருமேனியில் விழும் வகையில் கோவிலை சிறப்பாக வடிவமைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாலையில் சூரியனின் பொன்னிற மஞ்சள் நிறக்கதிர்கள் கண்களை கூசச்செய்யும் விதத்தில் பாய்ந்து கருவறையில் உள்ள பெருமாள் மீது விழுந்தது.இதைப் பார்த்த பக்தர்கள் பரவசமடைந்தனர்.

இந்த அபூர்வ காட்சியை இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் காணலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous article#Breaking: அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம்
Next articleஇந்த ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here