சன் பிக்சர்ஸின் அடுத்த அதிரடி!! இவங்க ரெண்டு பேரும் இணைந்தால் படம் வேற லெவல் ஹிட்டுதான்!!

Photo of author

By CineDesk

சன் பிக்சர்ஸின் அடுத்த அதிரடி!! இவங்க ரெண்டு பேரும் இணைந்தால் படம் வேற லெவல் ஹிட்டுதான்!!

தமிழ் நாட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி, மாரி, அசுரன் போன்ற பல தமிழ் திரைப்படங்களிலும் மற்றும் ரஞ்சனா போன்ற இந்தி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்குகிறார்.

மேலும் இவருக்கு 13 தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், 9 விஜய் விருதுகள்,7 இந்திய பிலிம்ஃபேர் விருதுகள், 5 விகடன் விருதுகள், 5 எடிசன் விருதுகள், 4 தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகள் போன்றவற்றை வென்றுள்ளார். இவர் இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட போர்பஸ் இந்திய பிரபலங்கள் 100 பட்டியலில் தனுஷ் ஆறுமுறை சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் படம் தயாரிக்கிறார். இவருக்கு சிறந்த நடிகர் விருது மட்டுமல்லாமல் இவருடைய தயாரிப்பில் வெளிவந்த விசாரணை படத்திற்கும் தேசிய விருது வழங்கப்பட்டது.

 

இந்த நிலையில் இவரின் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் திரைப்படம் கொரோனா தொற்று காரணமாகும் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. மேலும் இத்திரைப்படத்திற்கு அவரின் ரசிகர்கள் மிகப் பெரும் ஆதரவை அளித்திருந்தனர். இதை தொடர்ந்து தற்போது தனுஷ் தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்கள் இயக்கத்தில் பல படங்கள் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளது. மேலும் இந்த பெயரிடாத D44 திரைப்படம் விரைவில் தொடங்க உள்ளதால் இப்படத்தை பற்றிய மேலும் ஒரு முக்கியமான தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.