நெல்சனை லெஃப்ட் ரைட் வாங்கிய சன் பிக்சர்ஸ் நிறுவனம்!! படாதபாடுபடம் ஜாலி இயக்குனர்!!

Photo of author

By Jayachithra

தளபதி விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த திரைப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் திரைப்படத்தின் இயக்குநர் நெல்சன் இப்படத்தை இயக்கி வருகிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மேலும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதில் வில்லனாக பிரபல இயக்குனர் செல்வராகவன் நடிக்கிறார். இந்நிலையில், இப்படம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி பரப்பப்பட்டு வருகிறது. இது படக்குழுவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கடுப்பான சன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்குநர் நெல்சனிடம் இதுகுறித்து கடிந்து உள்ளனர். இதனால் படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் கூலாக இருக்கும் நெல்சன் தற்போது மிகுந்த கட்டுப்பாடுடன் நடத்தி வருகிறார்.
படப்பிடிப்பு தளத்தில் யாரும் மொபைல் ஃபோன், கேமரா உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்த அனுமதிப்பதில்லை.
தற்போது மிகுந்த கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

விரைவில் வெளியாக இருக்கும் இப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அவ்வ்ப்போது இதில் நடிக்கின்ற கதாப்பாத்திரங்கள் குறித்தும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.