“உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக…” சந்தானம் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்!

0
224

“உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக…” சந்தானம் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள குலுகுலு திரைப்படம் ஜூலை 29 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

நகைச்சுவை நடிகரான சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சபாபதி, டிக்கிலோனா உள்ளிட்ட சில படங்கள் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றது.

இதையடுத்து மேயாத மேன் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கும் ‘குலு குலு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் லாரி டிரைவராக நடித்துள்ளார். இந்தியா முழுவதும் பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக இருந்தது.

இந்நிலையில் குலுகுலு படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஜூலை 29 ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் விரைவில் பாடல்கள் மற்றும் டீசர் போன்றவை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்போது படத்தின் இயக்குனர் ரத்னகுமார் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமம் பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். படத்தை சன் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளதை வெளியிட்ட அவர் சன் தொலைக்காட்சியின் பிரபல வாசகமான ‘உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக” என்ற கேப்ஷனையும் கொடுத்துள்ளார்.

Previous articleமணிரத்னம் மேல் அதிருப்தியில் விக்ரம்?… ‘பொன்னியின் செல்வன்’தான் காரணமா?
Next articleதந்தையின் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பிய சிம்பு… அடுத்த ப்ளான் இதுதான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here