மீண்டும் சன் நிறுவனத்துடன் இணையும் விஜய்!

Photo of author

By CineDesk

மீண்டும் சன் நிறுவனத்துடன் இணையும் விஜய்!

CineDesk

Updated on:

மீண்டும் சன் நிறுவனத்துடன் இணையும் விஜய்!

விஜய் நடித்த ’சர்க்கார்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த நிலையில் தற்போது விஜய் நடித்துக்கொண்டிருக்கும் ’தளபதி 64’ படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி பெற்றுள்ளது;

சன் டிவி நிறுவனம் தமிழில் தயாராகும் பெரும்பாலான திரைப்படங்களின் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றி வரும் நிலையில், தற்போது தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் சாட்டிலைட் உரிமையையும் பெற்றுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் சன்டிவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

தளபதி 64 திரைப் படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற சன் டிவி உட்பட மூன்று முன்னணி டிவிகள் முயற்சித்து வந்தன. இதுகுறித்து நடந்த பேச்சுவார்த்தையில் சன் டிவி தற்போது வெற்றி பெற்றது. இந்த படத்திற்காக சன் டிவி மிகப் பெரிய தொகை ஒன்றை கொடுத்துள்ளதாகவும் அந்த தொகை இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திற்கும் கொடுக்காத மிக மிகப்பெரிய தொகை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் தளபதி 64 படத்தின் சாட்டிலைட் உரிமையை எவ்வளவு தொகை கொடுத்து சன் டிவி பெற்றது என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை இந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் தளபதி 64 திரைப்படம் வெளியாக உள்ள இதுவரை வெளிவரவில்லை.

முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் ‘தளபதி 64 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரம் தொடங்கவுள்ளது. விஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.