மெட்ரோ பணியால் விபத்தில் சிக்கிய சன் டிவி சீரியல் நடிகை…. அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணமா ??

0
145
Sun TV serial actress met with an accident due to metro work. Is it the negligence of the authorities??
Sun TV serial actress met with an accident due to metro work. Is it the negligence of the authorities??

மெட்ரோ பணியால் விபத்தில் சிக்கிய சன் டிவி சீரியல் நடிகை…. அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணமா ??

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் என்ற சீரியலில் நடித்து வருபவர் தான் பிரபல சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி இவர் முன்னதாக பல சீரியல்களில் நடித்துள்ளார்.அதுமட்டுமின்றி நடிகர் அஜித்தின் வலிமை படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் சைத்ரா ரெட்டி நடித்திருந்தார்.

இந்நிலையில், சைத்ரா ரெட்டி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சியான பதிவு ஒன்றை செய்துள்ளார்.அதன்படி, அவர் கூறியிருப்பதாவது, “நேற்று இரவு நான் எனது பணியை முடித்துவிட்டு 1 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்தேன். அப்போது போரூர் மேம்பாலத்தில் வாகன சோதனை நடைபெற்று கொண்டிருந்தது.

எனது கார் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அதேசமயம் மேலே மெட்ரோ கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது.அப்போது என் கார் மீது ஒரு பெரிய சிமெண்ட் கலவை விழுந்தது.நான் காருக்குள் இருந்ததால் எனக்கு எந்தவித காயமும் இல்லை. ஆனால் அங்கு மெட்ரோ பணிகள் நடந்து கொண்டிருக்கிறது என்று வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் பலகைகள் எதுவுமே இல்லை.

ஒருவேளை எனது இடத்தில் இருசக்கர வாகன ஓட்டி யாராவது இருந்திருந்தால் அவர்களின் நிலைமை என்னவாகும்? நிச்சயம் பெரும் சேதம் அல்லது உயிர் சேதம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.இதுபோன்ற அலட்சியத்திற்கு யார் பொறுப்பு? பொதுமக்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதுகுறித்து உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த பதிவுடன் சேதமடைந்த அவரின் கார் புகைப்படத்தையும் சைத்ரா ரெட்டி பதிவு செய்துள்ளார்.இதுபோன்ற அலட்சியங்கள் எளிதில் பிறர் உயிரை பறித்துவிடும் எனவே பொறுப்புடன் செயல்பட வேண்டுமென மெட்ரோ கட்டுமான அதிகாரிகளுக்கு பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.