ஹிப்ஹாப் ஆதியோடு லடாய்:அரண்மணை 3க்கு வேறு இசையமைப்பாளர் தேடும் சுந்தர் சி!

0
134

ஹிப்ஹாப் ஆதியோடு லடாய்:அரண்மணை 3க்கு வேறு இசையமைப்பாளர் தேடும் சுந்தர் சி!

சுந்தர் சி தான் இயக்க இருக்கும் புதிய படமான அரண்மணை 3க்கு புதிய இசையமைப்பாளர் ஒருவரை தேடி வருவதாக சொல்லப்படுகிறது.

சுந்தர் சி சமீபகாலமாக இசைம்யமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியோடு மிகவும் நெருக்கமாக பழகிவந்தார். அவர் இயக்கிய அரண்மணை 2, கலகலப்பு 2, ஆம்பள மற்றும் ஆக்‌ஷன் ஆகிய படங்களுக்கு வரிசையாக அவரைப் பயன்படுத்தி வந்தார். அது மட்டுமில்லாமல் ஆதியை ஹீரோவாக வைத்து மீசைய முறுக்கு, நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய படங்களைத் தயாரித்தார். இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த நெருக்கம் இருப்பதாக கோலிவுட்டில் சிலாகிக்கப்பட்டது.

இப்போது யார் கண்பட்டதோ இந்த கூட்டணி பிரிய இருக்கிறது. இதற்குக் காரணம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்புதான் என சொல்லப்படுகிறது.  ஏனன்றால் சுந்தர் சி தயாரிப்பில் ஆதி நடித்து விரைவில் வெளிவர இருக்கும் நான் சிரித்தால் படத்தின் படப்பிடிப்பின் போது ஆதி சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் ஆதி மீது அதிருப்தியான சுந்தர் சி அடுத்து ஆர்யாவை தான் இயக்கும் அரண்மனை 3 படத்தில் இருந்து ஹிப் ஹாப் ஆதியைத் தூக்கிவிட்டு வேறொரு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது.

Previous articleபூம்ரா துல்லிய தாக்குதல்:நியுசிலாந்தை வொயிட்வாஷ் செய்த இந்தியா!
Next articleமாட்டு சாணமும் கோமியமும்தான் கொரோனாவுக்கு மருந்து:சொன்னது யார் தெரியுமா?