பொன்னியின் செல்வன் வெற்றி எதிரொலி… இந்த வாரம் ரிலீஸாக இருந்த படங்கள் தள்ளிவைப்பா?

0
143

பொன்னியின் செல்வன் வெற்றி எதிரொலி… இந்த வாரம் ரிலீஸாக இருந்த படங்கள் தள்ளிவைப்பா?

பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸான நிலையில் இந்த வாரமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

பல ஆண்டுகாலமாக தமிழ் சினிமா ரசிகர்களும், தமிழ் வெகுஜன இலக்கிய வாசகர்களும் ஆவலாக காத்துக் கொண்டிருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் திரைப்படம். இந்நிலையில் இந்த படத்தை பலமுறை தொடங்க பல இயக்குனர்கள் முயன்றும் நடக்கவில்லை. இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக உருவாகி முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் வெளியாகி வெற்றிகரமாக முதல் வார இறுதியைக் கடந்துள்ளது. இந்நிலையில் இந்த 3 நாட்களில் 200 கோடி ரூபாயை தாண்டி உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக இணைந்துள்ளது பொன்னியின் செல்வன். தமிழகத்தைப் போல மற்ற மாநிலங்களில் இந்த படத்துக்கு பெரியளவில் வரவேற்பு இல்லை என்று சொல்லப்படும் நிலையில் இந்த வசூல் தொகை சற்று ஆச்சர்யமளிப்பதாகவும் உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியால் அக்டோபர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்த காஃபி வித் காதல் உள்ளிட்ட திரைப்படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுந்தர் சி இயக்கியுள்ள காஃபி வித் காதல் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.