வடிவேலு கம் பேக்!. மீண்டும் தலைநகரம் கூட்டணி!.. கேங்கர்ஸ் டிரெய்லர் வீடியோ!..

Photo of author

By அசோக்

வடிவேலு கம் பேக்!. மீண்டும் தலைநகரம் கூட்டணி!.. கேங்கர்ஸ் டிரெய்லர் வீடியோ!..

அசோக்

gangers

Gangers Trailer: தமிழ் சினிமாவில் காமெடி கலந்த காதல் திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் சுந்தர்.சி. இவருடன் வடிவேலுவும் சேர்ந்தால் சொல்ல வேண்டுமா!.. ஏற்கனவே தலைநகரம், வின்னர், நகரம் மறுபக்கம் போன்ற படங்களில் இருவரின் கூட்டணியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சுந்தர் சி இயக்கிய வின்னர் மற்றும் நடித்த தலைநகரம் ஆகிய 2 படங்களிலும் வடிவேல் காமெடி காட்சிகள் இப்போதுவரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில்தான் பல வருடங்களுக்கு பின் சுந்தர்.சி வடிவேல் காமெடி கேங்கர்ஸ் படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது. இந்த படத்தை சுந்தர்.சியே இயக்கியிருக்கிறார். இருவரும் மீண்டும் இணைகிறார்கள் என செய்தி வெளியான போதே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிற துவங்கியது. இந்த படத்தில் கேத்ரின் தெரஷா, மைம் கோபி, முனிஸ்காந்த், கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்.

gangers

போலீஸான சுந்தர்.சி. வில்லனை பிடிப்பதற்காக பி.டி.ஆசிரியர் போல ஒரு பள்ளியில் வேலைக்கு சேர்கிறார். அங்கே ஏற்கனவே வடிவேலு பி,டி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். அங்கே வேலை செய்து கொண்டே வில்லனை உளவு பார்க்கிறார் சுந்தர்.சி. பல ஆயிரம் கோடியை கொள்ளையடித்து வில்லன் பதுக்கி வைக்க அதை அவனிடமிருந்து எடுக்க நினைக்கிறார் சுந்தர்.சி. அவருடன் வடிவேலுவும் சேர்ந்து களத்தில் இறங்க நடக்கும் காமெடி கலாட்டாதான் கேங்கர்ஸ் படம்.

இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியாகியிருக்கிறது. டிரெய்லரில் பல வேடங்களிலும் வந்து அசத்துகிறார் வடிவேலு. அதிலும் டிரெய்லரின் இறுதியில் வயதானவர் போல வந்து வடிவேல் பேசும் வசனம் சிரிக்க வைக்கிறது. டிரெய்லரை பார்க்கும்போது கண்டிப்பாக கேங்கர்ஸ் படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.