கார்த்தி ராஜுமுருகன் இணையும் படத்தில் விஜய் சேதுபதிக்குப் பதில் இவரா?

Photo of author

By Vinoth

கார்த்தி ராஜுமுருகன் இணையும் படத்தில் விஜய் சேதுபதிக்குப் பதில் இவரா?

Vinoth

கார்த்தி ராஜுமுருகன் இணையும் படத்தில் விஜய் சேதுபதிக்குப் பதில் இவரா?

கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்க உள்ள திரைப்படம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை முடித்து அதன் ரிலீஸ் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.  இந்த படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில்அடுத்து  சர்தார் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. விருமன் திரைப்படம் ஏற்கனவே ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற நிலையில் ஒரே ஆண்டில் இதுபோல மூன்று படங்கள் கார்த்திக்கு ரிலீஸ் ஆனதே இல்லை. அதிலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கும் படமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் அடுத்து உருவாக உள்ள கார்த்தியின் 25 ஆவது படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்க உள்ளார். இந்த படத்தை கார்த்தியின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ் ஆர் பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்த விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பார் என சொல்லப்பட்டது. இதற்கான இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் இப்போது படத்தில் இருந்து விஜய் சேதுபதி வெளியேறி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு பதிலாக இப்போது தெலுங்கு நடிகரான சுனில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன புஷ்பா திரைப்படத்தில் சுனில் வில்லனாக மிரட்டி இருந்தார். நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த சுனிலை இயக்குனர் ராஜமௌலி கதாநாயகனாக்கி அவரின் வேறொரு பரிமானத்தைக் காட்டினார். அதன் பின்னர் வில்லன், குணச்சித்திரம் என பல வேடங்களில் சுனில் நடித்து வருகிறார்.