சுனிதா வில்லியம்ஸ் உடல்நலம் குறித்து வதந்தி பரப்ப வேண்டம்!! அவரின் புதிய புகைப்படத்தை பகிர்ந்த நாசா!!

Photo of author

By Vinoth

சுனிதா வில்லியம்ஸ் உடல்நலம் குறித்து வதந்தி பரப்ப வேண்டம்!! அவரின் புதிய புகைப்படத்தை பகிர்ந்த நாசா!!

Vinoth

Sunita Williams health rumors should not be spread!! NASA shared his new photo!!

நாசா: சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், போயிங் ஸ்டார் லைனர்.

கடந்த ஜூன் மாதம் நாசா திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் மற்றும்  புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் விண்வெளி ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து  போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றனர். அவர்கள் விண்வெளி ஆராய்ச்சி முடிந்த நிலையில் அவர்கள் கிளம்பும் தருவாயில் அவர்களது விண்கலம் தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக இருவரும் பல மாதமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர்.

மேலும்  சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் உடல் எடை குறைந்து கொண்டே வருவதாகவும் அவர் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் நாசா-விற்கு சென்ற போது அதனை மறுத்துள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள அனைத்து விண்வெளி வீரர்களுக்கும் வழக்கமாக மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகின்றது. சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் அனைவரும் நலமுடன் இருகின்றனர் என நாசா தெரிவித்துள்ளது. இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சுனிதா ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் குழு விண்கலத்தில் ஜன்னல்க்கு வெளியில் பூமியை எட்டிபார்த்து போல ஒரு புகைப்படம் நாசா வெளியிட்டது. அதன் மூலம் சுனிதா ஸ்பேஸ்எக்ஸ் நலமாக உள்ளார் என தெரிகிறது.  மேலும் அவரது உடல் எடை குறைப்பு குறித்து வதந்திகள் வந்த நிலையில் அதற்க்கு அவர் மறுப்பு தெரிவித்து நான் இங்கு வந்த பொழுத்து இருந்த எடை தான் தற்போதும் இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.