சன்னி லியோன் வேதம் ஓதியது போல விமர்சித்த ரோஜா!! அதிரடி பதில் கொடுத்த நடிகை!! 

0
72
Sunny Leone criticized Roja as if she recited the scriptures!! The actress gave an action response!!
Sunny Leone criticized Roja as if she recited the scriptures!! The actress gave an action response!!

சன்னி லியோன் வேதம் ஓதியது போல விமர்சித்த ரோஜா!! அதிரடி பதில் கொடுத்த நடிகை!! 

ஆந்திர மாநிலத்தில் மந்திரி ரோஜா பவன் கல்யான் மற்றும் சன்னி லியோன் குறித்து விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

பாலிவுட் நடிகை சன்னி லியோன் முன்னால் ஆபாச நட்சத்திரமாக இருந்தாலும் தற்போது பாலிவுட் கதாநாயகியாக தனது பயணத்தை தொடர்ந்து கொண்டுள்ளார். முன்னாடி கேலி செய்தவர்கள் எல்லாம் தற்போது அவருடன் நடித்து வாய்ப்பு கொடுத்து ஊக்கபடுத்தி உள்ளனர்.

குழந்தைகளை தத்து எடுப்பது,போன்ற தொண்டு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ஆந்திர மந்திரி ரோஜா பவன் கல்யான் மற்றும் சன்னி லியோன் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

பவன் கல்யான் தனது வராஹி யாத்திரையில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நிலையில் பவன் ஒழுக்கம் குறித்து ரோஜா கூறுகையில் அவரை திட்டும் கோபத்தில் சன்னி லியோனை இழுத்தார். அதில் அவர் பவன் கல்யான் ஜெகனுக்கு கற்றுக் கொடுக்கிறார். இது சன்னி லியோன் வேதம் ஓதியது போல உள்ளது. என விமர்சனம் அளித்தார்.

இதற்கு உடனடி எதிர்வினையாக மந்திரி ரோஜாவை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம்,செய்து வருகின்றனர். அதிலும் பவன் கல்யான் ரசிகர்கள் சன்னி லியோனுக்கு ஆதரவு தெரிவித்தும் மந்திரி ரோஜாவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் தன் மீது ரோஜா கூறிய விமர்சனத்துக்கு வீடியோ ஒன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டு கண்டனம் தெரிவித்து உள்ளார். அதில் அவர் நான் ஆபாச நட்சத்திரம். ஆனால் கடந்த காலத்தை நினைத்து வருத்தப்பட்டதில்லை. உங்களை போல அல்லாமல் எதை செய்ய விரும்புகிறேனோ? அதை வெளிப்படையாக செய்வேன்.

ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை. உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் நான் ஆபாச உலகை விட்டு வெளியேறி விட்டேன். ஆனால் நீங்கள் அதை செய்யவில்லை. எனக் கூறி உள்ளார். இது தற்போது எதிர்கட்சிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைரலாகி வருகிறது. இதற்கு ரோஜா என்ன கூறுவார் என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

 

 

சன்னி லியோன் அளித்த பதில் ட்விட் ,