சூரிய ஒளியில் இருந்து நமது சருமத்தை பாதுகாக்க பல்வேறு க்ரீம்களை பயன்படுத்துகின்றோம்.இதில் சன்ஸ்க்ரீன் பயன்பாடு இன்றியமையாதவையாக இருக்கிறது.நம் சருமத்திற்கு சன்ஸ்க்ரீன் ஒரு பாதுகாப்பான பொருளாக பார்க்கப்படுகிறது.
நாம் வெயிலில் சென்றால் நமது சரும நிறம் முற்றிலும் மாறிவிடும்.முகம்,கை என்று ஒவ்வொன்றும் தனி தனி நிறத்தில் காணப்படும்.அதிக வெயில் படும் சருமத்தின் நிறம் கருமையாக மாறிவிடும்.வெளியில் செல்லும் போது அவசியம் சன்ஸ்க்ரீன் அப்ளை செய்து கொள்ள வேண்டுமென்று பலரும் அறிவுறுத்துகின்றனர்.
சன்ஸ்க்ரீன் பயன்படுத்தினால் தோல் பாதிக்கப்பட்டுவிட்டும்,புற்றுநோய் பாதிப்பு வந்துவிடும் என்ற தவறான கருத்துக்கள் பரவி வருகிறது.சன்ஸ்க்ரீன் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.எல்லா சன்ஸ்க்ரீனும் சருமத்திற்கு நல்லது கிடையாது.
சன்ஸ்க்ரீனில் SPF 15,SPF 30,SPF 50 போன்றவை கிடைக்கும்.இதில் SPF 30 புற ஊதாக் கதிர்கள் நமது சருமத்தில் அண்டாமல் பார்த்துக் கொள்கிறது.வெயில் காலத்தில் SPF 30 சன்ஸ்க்ரீன்தான் சிறந்ததாக உள்ளது.
அதேபோல் சன்ஸ்க்ரீன் வாங்கும் முன் அதன் காலாவதி தேதியை அவசியம் கவனிக்க வேண்டும்.சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதால் கருமை மற்றும் சுருக்கங்கள் நீங்கும்.நமது முகத்திற்கு 3 மில்லி அளவு சன்ஸ்க்ரீன் பயன்படுத்தினால் போதுமானது.சன்ஸ்க்ரீனில் மூன்று பிளஸ் குறி இருக்கிறதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.இது நமது சருமத்தை சூரிய கதிர்வீச்சில் இருந்து காக்க கூடியது.
அதாவது SPF PA +++ என்று குறிப்பிட்டுருப்பதை பார்த்து வாங்க வேண்டும்.காலையில் போடும் சன்ஸ்க்ரீனை மாலை வரை அப்படியே விடக் கூடாது.ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை சன்ஸ்க்ரீனை நம் சருமத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.அதன் பிறகு சருமத்தை க்ளீன் செய்துவிட்டு மீண்டும் சன்ஸ்க்ரீன் அப்ளை செய்ய வேண்டும்.