மாணவர்களுக்கு ரூ1000 வழங்குவதை அடுத்து வெளியான சூப்பர் அறிவிப்பு!! அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இது கட்டாயம்!!

Photo of author

By Rupa

Tamilnadu Gov: இனி அனைத்து கல்வி நிறுவனங்களிலும் உதவி மையம் அமைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசானது பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவியர் மற்றும் மாணவிகளுக்கு உயர் கல்வியின் இடைநிற்றலை தடுப்பதற்காக மாதம் ரூ 1000 வழங்கி வருகிறது. அதன் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர் மற்றும் மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை மீண்டும் வெளியிட்டுள்ளது.

அதாவது பெற்றோர் என தொடங்கி மாணவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் நோக்கில் ஹெல்த் டிஸ்க் அதாவது உதவி மையம் ஒன்றை அமைக்க போவதாக கூறியுள்ளனர். இது அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நிறுவ உத்தரவிட்டுள்ளனர். இதன்படி மாணவர்களின் பெற்றோர்கள் தங்களின் சந்தேகங்கள் குறித்தும் தங்களது பிள்ளைகள் எடுக்கும் பிரிவுகள் குறித்தும் விளக்கத்துடன் கேட்டுக் கொள்ள முடியும்.

குறிப்பாக ஒவ்வொரு பெற்றோரும் எது குறித்து தங்களது பிள்ளைகள் படிக்கின்றார்கள் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பல கேள்விகள் இருக்கும். இதனையெல்லாம் தவிர்க்கும் விதமாக தற்பொழுது ஹெல்ப் டெஸ்க் இருக்கும் என கூறியுள்ளனர். மேலும் இந்த ஹெல்ப் டெஸ்க் மூலம் தங்களின் கோரிக்கைக்கு ஏற்றவாறு எந்த நபரை பார்க்க வேண்டும் அதன் நடைமுறைகள் என்ன என அனைத்து விவரங்களையும் அலைக்கழிக்காமல் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளலாம்.