கல்லூரி மாணவிகளுக்கு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! அனைத்து கல்லூரிகளில் இது கட்டாயம்!!
பெண்களுக்கு தற்காலிகமாக தொடர்ந்து பாலியல் சீண்டல்கள் மற்றும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் அதிகரித்து வரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பள்ளி கழக வன்னிய குழுவானது உயர் கல்வி நிறுவனங்கள் எந்தெந்த வழிமுறைகளை பெண்களின் பாதுகாப்பிற்காக கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அங்கு படிக்கும் மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண் ஆசிரியர்கள் பெண் விரிவுரையாளர்கள் என அனைவருக்கும் தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
அதேபோல கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு ஏதேனும் விபரீதம் நடைபெறும் பொழுது அவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில் அவர்களுக்கு என்று அவசர கால தொடர்பு எண் வழங்கப்படுவதோடு பெண்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான பயிற்சிகளையும் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பெண்கள் தங்கும் விடுதியை சுற்றி மர்ம நபர்கள் உள்ளே வராத வகையில் சுவர் எழுப்ப வேண்டும் எனவும் அது சுற்றி பாதுகாப்பிற்காக ஆட்கள் பணி அமர்த்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அதேபோல ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் அனைத்து வகுப்புகள் அங்குள்ள பூங்காக்கள் என அனைத்து இடங்களிலும் கட்டாயம் மின்விளக்குகள் அமைத்திருப்பது அவசியம் என்றும் கல்லூரிகளில் பெண்கள் எந்தெந்த இடங்களில் அதிக அளவு நடமாடி வருகின்றனார்களோ அங்கெல்லாம் கட்டாயம் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாணவிகள் உபயோகப்படுத்தக்கூடிய கழிப்பறைகள் உள்ளிட்டவை எப்பொழுதும் தண்ணீர் வசதியுடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.