+2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு சூப்பர் சான்ஸ்!! படிக்கும்போதே கை நிறைய சம்பளத்தில் வேலை!!

Photo of author

By Divya

+2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு சூப்பர் சான்ஸ்!! படிக்கும்போதே கை நிறைய சம்பளத்தில் வேலை!!

தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மேம்பட்டுக்கழகம்(TAHDCO) மூலம் தொழில் கடன்,சுய வேலைவாய்ப்பு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதில் ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பட்டு கழகம் ஆதி திராவிட மக்கள் சுய தொழில் தொடங்க தாட்கோ மூலம் மானியத்துடன் கடன் பெற ஏற்பாடு செய்து தருகிறது.

மேலும் ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) மூலம் +2-வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு hcl நிறுவனம் படிப்புடன் வேலை வழங்கி வருகிறது.இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் +2வில் தேர்ச்சி பெற்ற ஆதி திராவிட மாணவர்கள் hcl நிறுவனத்தில் (B.Sc (Computing Desgining) B.Com.BCA & BBA) உள்ளிட்ட பட்டப்படிப்புகள் மேற்கொண்டு வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவர்கள் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியினை துவங்க HCL Technologies ஒரு வருடகால பயிற்சி வழங்குகிறது.

மேலும் பிட்ஸ்பிலானி கல்லுரியில் B.Sc (Computing Desigining),சாஸ்தரா பல்கலைகழகத்தில் BCA பட்டப்படிப்பு,அமிட்டி பல்கலைகழகத்தில் BCA/BBA/B.Com மற்றும் நாக்பூரிலுள்ள ஐ.ஐ.எம் பல்கலைகழகத்தில் Integrated Management பட்டபடிப்புகளில் சேர்ந்து பட்டப்படிப்பு முடிக்கும் மாணவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க இருக்க வேண்டிய தகுதிகள்:

1)ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவ/மாணவிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

2)+2வில் 2022-23 ஆம் ஆண்டுகளில் 60% மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் 75% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3)விண்ணப்பிக்கும் மாணவ/மாணவியரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

4)HCL மூலம் நடத்தப்படும் Entrance Examination தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் விவரம்: தங்கள் திறமைக்கேற்றவாறு ரூ.17,000 முதல் ரூ.70,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.